நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி எதிர்பார்க்காத ஒரு தொடக்கம் முதல் நாளில் அமைந்திருக்கிறது. மழையால் பாதியில் முடித்துக் கொள்ளப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி 55.0 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.
ப்ரித்வி ஷா 16 ரன்களிலும், மாயங்க் அகர்வால் 34 ரன்களிலும், புஜாரா 11 ரன்களிலும், கேப்டன் கோலி 2 ரன்னிலும் என வெளியேற்றப்பட்டனர். சற்று எதிர்பார்க்கப்பட்ட ஹனுமா விஹாரி 7 ரன்களில் அவுட்டாக, இந்தியா தனது ஒரு கையை இழந்தது.
பெண்கள் டி20 உலகக் கோப்பை - இந்தியா vs ஆஸ்திரேலியா லைவ் கிரிக்கெட்
இந்திய அணியின் பேஸ்மென்ட்டை சிதைத்தவர் கைல் ஜேமிசன். இந்த 6 அடி 6 அங்குல வலது கை மித வேகப்பந்து வீச்சாளர் தான் புஜாரா, கோலி, விஹாரி ஆகிய மூன்று நங்கூரங்களை காலி செய்தவர். அதுவும் இது தான் அவரது முதல் டெஸ்ட் மக்களே.
கோலியை அவர் காலி செய்த அபாரமான மூவ். அது பக்கா ஸ்கெட்ச் பவுலிங் என்று கூட சொல்லலாம். அது ஒரு ஃபுல் வைட் பந்து. கோலி அதை கவர் டிரைவ் செய்ய, பந்து அவுட் சைட் ஆகி முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ராஸ் டெய்லரிடம் கேட்ச் ஆனது.
ப்ரித்வியை சவுதி வெளியேற்றியதும் ஒரு எதிர்பார்த்த தருணம் தான். ஃபூட் ஒர்க்கே இல்லாமல் ஆடிக் கொண்டிருந்த ஷாவுக்கு ஒரு ஃபுல்லிஷ் அவுட் ஸ்விங்கர் வீசினார். மிடில் மற்றும் ஆஃப் லைனில் வந்த பந்தை லெக் சைடில் திருப்பி விட நினைத்தார். (நாம நினைக்குறது என்னைக்கு நடந்திருக்கு!!) பந்து ஸ்டெம்ப்பை காலி செய்ய தலை தொங்கியது.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a18-3-300x164.jpg)
2.03 மீட்டர் உயரம் கொண்ட ஜேமிசன் தனது முதல் சர்வதேச விக்கெட்டாக புஜாராவை கேட்க, ஆண்டவன் பரிசளிக்க, கண்ணீர் இந்திய ரசிகன் கண்களில். 130km/h வேகத்தில் தோள்பட்ட நோக்கி வந்த பந்து, புஜாரா பேட்டில் உரசி கீப்பர் கிளவுஸில் உட்கார்ந்து கொண்டது.
இது போல்ட் ஏரியா... உள்ள வராத என்பது போல், போல்ட் வீசிய இடுப்பு உயர ஷார்ட் பந்தில், புல் ஷாட் அடிக்க எண்ணி டாப் எட்ஜ் ஆன மாயங்க் அகர்வால் 84 ரன்கள் தாக்குப்பிடித்து 34 ரன்களுடன் கேட்ச் ஆகி வெளியேற, இந்திய Dugout அந்த 'வாழைப்பழத்தை உறிடா; சாப்பிடுவோம்' மோடுக்கு சென்றுவிட்டது.
ஜேமிசன் பவுன்சரில் சிக்கிய மற்றொரு அப்பாவியாய் விஹாரி. சத்தமே இல்லாமல் எட்ஜ் ஆகி 7 ரன்களில் வெளியேற, இந்தியா தனது ஐந்தவாது விக்கெட்டை பறிகொடுத்தது.
மழை மட்டும் வராமல் இருந்திருந்தால், இன்று முதல் நாளே ஆல் அவுட் ஆகியிருக்க வேண்டிய இந்திய அணி, தப்பித்தது!.