IND vs NZ 2nd ODI match 2022, Predicted Playing 11 Tamil News: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டிய தலைமையிலான இந்திய டி20 அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது. இந்த தொடருக்கான இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்தி வருகிறார்.
ஆக்லாந்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 307 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில், கேப்டன் கேன் வில்லியம்சன் (94) - டாம் லதாம் (145) ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதனால், நியூசிலாந்து அணி இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை ஞாயிற்று கிழமை (நவம்பர் 27) ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியானது இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கும்.
Hello from Hamilton 👋📍#TeamIndia | #NZvIND pic.twitter.com/AHskNav1Vm
— BCCI (@BCCI) November 26, 2022
இந்தியா vs நியூசிலாந்து: 2வது ஒருநாள் போட்டி விளையாடும் லெவன் எப்படி?
பந்துவீசக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் அணியில் இல்லாதது இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. டி20 உலக கோப்பையில் பாபர்-ரிஸ்வான் மற்றும் பட்லர்-ஹேல்ஸ் ஜோடியை விராட் கோலி (2021ல்) மற்றும் ரோஹித் சர்மா (2022ல்) தலைமையிலான அணி உடைக்க முடியாமல் போனதற்கு இது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த முக்கிய காரணி தான் நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திலும் தொடர்ந்தது. அந்தப் போட்டியில் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லாத்திங் ஆகியோர் கிரீஸில் இருந்தபோது ஷிகர் தவான் இதையே எதிர்கொண்டார்.
இந்த தொடரின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, டி20 கிரிக்கெட்டில் பல பரிமாணமுள்ள வீரர்கள் காலத்தின் தேவை என்று பொறுப்பு பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் குறிப்பிட்டு இருந்தார்: "எங்களுக்கு பேட்டிங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்கள் மற்றும் பந்து வீசக்கூடிய பேட்டர்கள் தேவை."
பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் கூறியுள்ளது போல, நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தீபக் ஹூடா, தீபக் சாஹர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை சேர்க்க வேண்டும் நாங்கள் (இந்தியன் எக்ஸ்பிரஸ்) வாதிடுகிறோம்.
ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக தீபக் ஹூடா
இந்திய அணியில் தீபக் ஹூடா மட்டுமே பந்து வீசக்கூடிய பேட்ஸ்மேன். ரிஷப் பண்ட் தனக்கான இடத்தை தக்கவைக்க போராடி வரும் நிலையில், அவருக்கு பதில் தீபக் ஹூடாவை அணியில் சேர்க்கலாம். அவரால் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட முடியும். மேலும், பந்துவீச்சில் சில ஓவர்களை அவரால் வீச முடியும்.
அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் தீபக் சாஹர்
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு இந்தியா ஓய்வு அளிக்கலாம். அர்ஷ்தீப் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருகிறார். தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர், எப்போதும் போல ஜொலிக்க தவறி இருந்தார். அவருக்கு பதில் சாஹர் சேர்க்கப்பட்டால், பேட்டிங்கிலும் இந்தியாவுக்கு அதிக பலம் கிடைக்கும்.
யுஸ்வேந்திர சாஹலுக்கு பதில் குல்தீப் யாதவ்
யுஸ்வேந்திர சாஹலைப் பொறுத்தவரை, பந்துவீச்சில் சரியான நேரமின்மை என்று அழைக்கலாம். அவரின் பந்துகள் சரியாக கணிப்பட்டு விரட்டப்படுகின்றன. இதனால், அவரின் வழக்கமான பந்துவீச்சை அவரால் தொடர்வதில் அதிகம் சிரமம் இருந்தது. அதிக ரன்களை விட்டுக்கொடுத்தோடு, இலவச ரன்களையும் அள்ளிக்கொடுத்தார். அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாடும் லெவன் அணியில் இடம் பெறலாம்.
இந்தியா vs நியூசிலாந்து: 2வது ஒருநாள் போட்டி உத்தேச பிளேயிங் 11:
இந்தியா:
ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக்
நியூசிலாந்து:
ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன்
இந்தியா vs நியூசிலாந்து: இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஷாபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் சிங். ஷர்துல் தாக்கூர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
நியூசிலாந்து:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டெவின் கான்வே, டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சவுத்தி, மேட் ஹென்றி, ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.