IND vs NZ 2nd ODI: Rohit cute moments during toss Tamil News - பேட்டிங்கா, பவுலிங்கா? பாவம் அவரே குழம்பிட்டார்… கேப்டன் ரோகித்தின் கியூட் மொமண்ட்ஸ் | Indian Express Tamil

பேட்டிங்கா, பவுலிங்கா? பாவம் அவரே குழம்பிட்டார்… கேப்டன் ரோகித்தின் கியூட் மொமண்ட்ஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடப்படும்போது கேப்டன் ரோகித்தின் செய்த கியூட் மொமண்ட்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

IND vs NZ 2nd ODI: Rohit cute moments during toss Tamil News
Indian skipper Rohit Sharma alongside the Kiwis skipper Tom Latham at the toss during the 2nd ODI. (Screengrab)

India vs New Zealand 2nd ODI – Rohit Sharma Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று (சனிக்கிழமை) பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங் செய்த நியூசிலாந்து 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 36 ரன்கள் எடுத்தார். மிரட்டலான பந்துவீச்சு தாக்குதல் தொடுத்த இந்திய அணியில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் தலா 2 விக்கெட்டையும், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பேட்டிங்கா, பவுலிங்கா? பாவம் அவரே குழம்பிட்டார்… கேப்டன் ரோகித்தின் கியூட் மொமண்ட்ஸ்

இந்த ஆட்டம் தொடங்கும் முன் டாஸ் போட இரு அணியின் கேப்டன்களும் களம் புகுந்தனர். அப்போது, மேட்ச் ரெஃப்ரீ காயினை சுண்டி விடுவார் என்று வரணையாளர் ரவி சாஸ்திரி அறிவித்தார். அதன்படி டாஸ் போடப்பட்டு, “தலை” என்று கேட்ட ரோகித்திடம் என்ன செய்ய இருக்கீர்கள்? எனக் கேட்க்கப்பட்டது. அந்த தருணத்தில் சற்றே குழம்பிய ரோகித், வலது கையை நெற்றியில் வைத்தவாறு சில விநாடிகள் யோசித்து விட்டு பவுலிங் என்றார். இது அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை உருவாக்கியது.

கேப்டன் ரோகித்தின் இந்த கியூட் மொமண்ட்ஸ் வீடியோவாக பதிவான நிலையில், அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs nz 2nd odi rohit cute moments during toss tamil news