ind vs NZ t20, india vs New Zealand
India vs New Zealand T20 Match Live Telecast: இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நாளை (ஜன.26) நடைபெறுகிறது.
இதே ஆக்லாந்து மைதானத்தில் நியூசிலாந்து எதிராக கடந்த வெள்ளியன்று (ஜன.24) நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி தானே எதிர்பார்க்காத ஒரு அபார வெற்றியை பதிவு செய்தது.
சிறுமியின் தலையை தாக்கிய ரஃபேல் நடால் ஷாட் – முத்தம் கொடுத்து மன்னிப்பு (க்யூட் வீடியோ)
ஏதோ இந்தியாவின் நாக்பூர் பிட்சில் விளையாடுவதைப் போன்று, நியூசிலாந்து நிர்ணயித்த 204 ரன்கள் இலக்கை 19வது ஓவரிலேயே எட்டி அசத்தியது கோலி டீம்.
இந்நிலையில், நாளை மீண்டும் ஆக்லாந்து மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது.
இந்திய நேரப்படி நாளை காலை 11:50 மணிக்கு டாஸ் போடப்பட்டு, பகல் 12:20 மணிக்கு ஆட்டம் துவங்கப்படும்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்.டி சேனல்களில் போட்டியை லைவாக காணலாம்.
ஆன்லைனில் ஹாட்ஸ்டாரில் போட்டியை பார்க்கலாம்.
தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை காணலாம்.
வாழைப்பழத் தோலைக்கூட உரித்து சாப்பிட முடியாதா? டென்னிஸ் வீரரை விளாசிய நடுவர்; வைரல் வீடியோ
Auckland Weather Today: ஆக்லாந்து வானிலை
நாளை ஆக்லாந்தில் மழை இருக்காது என்றும், ஓரளவு மேகமூட்டத்துடன் வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ind vs Nz 2nd t20: Auckland weather today
இந்திய அணி வீரர்கள் விவரம்:
விராட் கோலி(C), ரோஹித் ஷர்மா (VC), லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (WK), ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துள் தாகூர்
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook