/tamil-ie/media/media_files/uploads/2020/02/a63-2.jpg)
India vs New Zealand Score, ND vs NZ scorecard,
IND vs NZ 2nd Test Full Scorecard: இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, இன்று (பிப்.29) கிறிஸ்ட்சர்ச்சில் இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அணியின் லாஆஆங் தொடர் கிளைமேக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்று ஒயிட் வாஷ் செய்து வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என்று இழந்தது.
Presenting #TeamIndia's new training drill - 'Turbo Touch' ???????? - by @RajalArorapic.twitter.com/s5APbTNJIB
— BCCI (@BCCI) February 28, 2020
இதைத் தொடர்ந்து வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி அடைந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமெனில், இப்போட்டியில் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டும்.
டி20 உலகக் கோப்பை: 16 வயது சரவெடியை உலகம் அடையாளப்படுத்தும் பதம் 'லேடி ஷேவாக்'!
கோலி & கோ இதுவரை பதட்டம் அடையவில்லை. ஆனால், தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகின்றனர். இதற்கு தொடக்க பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமையாதது மிக முக்கிய காரணம். அதிக அனுபவம் இல்லாத பிரித்வி ஷா, மாயங்க் அகர்வால் பார்ட்னர்ஷிப்பின் தொடக்கம், 'அட என்னய்யா இவிங்க' என்ற ரேஞ்சில் இருப்பது, அடுத்தடுத்த ஸ்லாட்டில் இறங்கும் வீரர்களின் நம்பிக்கையை சற்று குலைத்து விடுகிறது.
புஜாரா, ரஹானே குறிப்பாக கோலி ஆகிய மூவரில் இருவர் கட்டாயம் சிறப்பாக ஆடாத வரை இந்தியாவால் ஆதிக்கம் செலுத்த முடியாது.
அதேசமயம், மேலும் ஒரு சோதனையாக, இஷாந்த் ஷர்மா காயம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
உலகின் நம்பர்.1 டெஸ்ட் அணியாக விளங்கும் இந்திய அணி, இத்தொடரை வெல்லுமா? தோற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.