Advertisment

IND vs NZ: இந்தியாவுக்கு ஷாக்… 3-வது போட்டியும் மழையால் பாதிக்குமா? லேட்டஸ்ட் வெதர் ரிப்போர்ட்

தொடரை கைப்பற்றும் அணி எது? என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நாளை புதன்கிழமை கிரிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

author-image
WebDesk
New Update
Ind vs NZ 3rd ODI, Christchurch Weather Report in tamil

India vs New Zealand 3rd ODI Christchurch Weather Report: Heavy RAIN predicted for final game Tamil News

India vs New Zealand 3rd ODI Christchurch Weather Report Tamil News: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisment

இந்நிலையில், 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில், ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்று கிழமை (நவம்பர் 27 ஆம் தேதி) ஹாமில்டனில் நடந்த 2வது ஒருநாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவும், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த நேரத்திலும் மழை குறுக்கிட்டது. பிறகு, மழை சில நிமிடங்கள் விட்டு விட்டு பெய்தது. ஒரு கட்டத்தில் ஜோராக பெய்தது. இதனால், ஆட்டத்தை ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டது. இதனால், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், தொடரை கைப்பற்றும் அணி எது? என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நாளை புதன்கிழமை கிரிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கும்.

ஏற்கனவே, டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ள நிலையில், போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் அந்த அணியே தொடரை வென்றதாக அறிவிக்கப்படும். இந்த காரணிகளை கருத்தில் கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

3-வது போட்டியும் மழையால் பாதிக்குமா? லேட்டஸ்ட் வெதர் ரிப்போர்ட் என்ன சொல்கிறது?

இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது போட்டியும் மழையால் பாதிக்குமா? என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. நியூசிலாந்து வானிலை ஆய்வு மையம் போட்டி நடக்கும் கிரிஸ்ட்சர்ச்சில் புதன்கிழமை மாலை 88 சதவீதத்திற்கும் அதிகமான ஈரப்பதத்துடன் கூடிய மழை பெய்யும் என்று கணித்துள்ளது.

அக்யூவெதரின் கூற்றுப்படி, நவம்பர் 30 அன்று கிறிஸ்ட்சர்ச்சில் மதியம் சிறிய மழையுடன் பெரும்பாலும் மேகமூட்டத்துடன், தென்றலுடன் மற்றும் குளிர்ச்சியாக இருக்கும். இரவில் குறைந்த மேகங்கள் இருக்கும் கிறிஸ்ட்சர்ச் வானிலை இருண்டதாக இருக்கும்.

publive-image

காலையில் நாள் நன்றாக இருக்கும், பின்னர் தென்மேற்கு மாற்றத்துடன் மழை பெய்யும், வெளிப்படும் இடங்களில் வலுவாக இருக்கும்.

பகலில் அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். மேலும், மாலை 88 சதவீதத்திற்கும் அதிகமான ஈரப்பதத்துடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக ஒருநாள் போட்டியை முடிக்க இரு தரப்புக்கும் இடையே குறைந்தபட்சம் 20 ஓவர்கள் வீசப்பட்டு இருக்க வேண்டும். எனவே, டாஸில் வென்றாலும், தோற்றாலும் இந்தியா ஒரே ஒரு திட்டத்துடன் தான் களமாட வேண்டும். அதாவது, தொடக்க முதலே அதிரடியாக விளையாட வேண்டும். அப்போது தான் டி.எல்.எஸ் முறைப்படி நல்ல ரன்ரேட்டுடன் இருக்க முடியும். அதற்கு பொறுப்பு கேப்டன் ஷிகர் தவான் அணியை சிறப்பான முறையில் வழிநடத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

India Vs New Zealand Sports Cricket Indian Cricket Team Shikhar Dhawan Kane Williamson
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment