India vs New Zealand {IND VS NZ} 3rd T20 Match 2022 Match Date, Schedule, Venue, Squad Details | இந்தியா vs நியூசிலாந்து {IND VS NZ} T20 போட்டி 2022 போட்டி தேதி, அட்டவணை, இடம், அணி விவரங்கள்: நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 18 ஆம் தேதி நடந்த முதலாவது டி20 ஆட்டம் தொடர் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று 2வது டி20 போட்டி நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி நியூசிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க்கில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
கேப்டன் வில்லியம்சன் விலகல்
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் திடீரென விலகியுள்ளார். அவர் தனது மருத்துவ காரணங்களுக்காக விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாளை நடைபெறும் ஆட்டத்தில் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய அணியில் உம்ரான் மாலிக், சஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் சதமடித்து மிரட்டி இருந்தார். தொடக்க வீரர் இஷான் கிஷான் அதிரடித் தொடக்கம் கொடுத்தார். ஆனால், ரிஷப் பண்ட் மீண்டும் ஒரு சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தொடக்க வீரராக களமாட வேண்டும் என்று குரல்கள் வலுத்த நிலையில், அணிக்கு தொடக்கம் கொடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டும் அதை அவர் தவற விட்டார். எனினும், அவரின் பேட்டிங்கை கருத்தில் கொண்டு, தொடரை தீர்மானிக்கும் போட்டியில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
சஞ்சு சாம்சன் பவர்-பிளேயில் அடித்து ஆடக்கூடிய மற்றொரு வீரராக இருக்கிறார். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் போட்டிக்கு பிந்தைய கூற்றுப்படி மூன்றாவது டி20-க்கு நிர்வாகம் அதிக மாற்றங்களைச் செய்ய வாய்ப்பில்லை. "எனக்குத் தெரியாது (அடுத்த ஆட்டத்திற்கான மாற்றங்கள் பற்றி). அணியில் உள்ள அனைவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்க விரும்புகிறேன். ஆனால் இது இன்னும் ஒரு விளையாட்டு. எனவே இது சற்று கடினமானது, ”என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்திய அணியில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் சுப்மான் கில் தொடக்க ஆட்டக்காரராக இருந்தார். ஆனால், தொடக்க ஆட்டத்தில் அணி இரண்டு இடது கை வீரர்களுடன் களமாடியது. அவருக்கு தொடர்ந்து ஒருநாள் தொடரில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். ஆடும் லெவனில் பந்துவீசக்கூடிய வீரர்களையே சேர்க்க பாண்டியா ஆர்வமாக உள்ளார். அவரின் இந்த விருப்பத்தால் தீபக் ஹூடாக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை பேட்டிங்கில் நழுவ விட்ட ஹூடா பந்துவீச்சில் பிடித்துக்கொண்டார். தொடக்க ஆட்டத்தில் டக்-அவுட் ஆகி வெளியேறி இருந்த அவர் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார்.
இந்த ஆட்டத்தில் உம்ரான் மாலிக் இடம்பெறாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. டி20 கிரிக்கெட்டில் ஒரு தரமான வேகப்பந்து வீச்சாளர் தேவை என்று நிரூபிக்கப்பட்டது. நியூசிலாந்து தொடர் உம்ரான் மாலிக்ற்கு ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூன்று டி20 போட்டிகளில் அவர் விளையாடினார். ஆனால், அவருக்கு இது போன்ற தொடரிலும், இன்னும் அதிகமான போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
தனது முதல் ஆட்டத்தை விளையாடிய யுஸ்வேந்திர சாஹல், தான் ஏன் அணியில் வழக்கமாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக காட்டினார். ஆனால், சக மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்தியா:
ஷுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷ்ரேயாஸ் ஐயர், குல்ஷல் யாத்யர், குல்ஹால் யாத்யர்,
நியூசிலாந்து:
ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி.
இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள்
நியூசிலாந்து
ஃபின் ஆலன், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி (கேப்டன்), ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன்.
இந்தியா
இஷான் கிஷன், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.