India vs New Zealand, 3rd T20I: Probable Playing XI Tamil News: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நாளை புதன் கிழமை (பிப்ரவரி 1 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1 -1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது போட்டி நாளை நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் வெற்றியை ருசிக்கும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதனிடையே, இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தொடர் வீரருக்கான ஸ்லாட் பற்றி விவாதம் இந்திய அணி நிர்வாகத்திலும் எழுந்துள்ளது.
இந்திய தொடக்க வீரரான ஷுப்மன் கில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானார். இத்தொடரில் அவர் பெரிதும் சோபிக்காவில்லை. ஆனால், ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினர். இதனால், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவருக்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரிலும் இரட்டை சதம் அடித்து மிரட்டினார். இது அவருக்கான டி20 அணி வாய்ப்பு கிடைக்க உதவியது. எனினும், நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20யில் அவர் பெரிய அளவில் ரன்களையும் சேர்க்கவில்லை. அணிக்கு தேவையான வலுவான தொடக்கத்தையும் கொடுக்கவில்லை.

இதுவரை நடந்த 2 போட்டியிலும் இந்திய டாப் ஆடர் வீரர்களான ஷுப்மன் கில், இஷான் கிஷன் மற்றும் ராகுல் திரிபாதி இணைந்து மொத்தம் 54 ரன்கள் தான் எடுத்துள்ளனர். இதனால், அவர்களது இடத்தில் மாற்று வீரரை தேடும் நிலையில் இந்திய நிர்வாகம் உள்ளது. குறிப்பாக, தொடக்க வீரர் ஷுப்மன் கில் பதில் பிருத்வி ஷா மாற்றப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கே அணி நிர்வாகமும் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஷுப்மன் கில் விளையாடியுள்ள 5 போட்டிகளில் (இலங்கைக்கு எதிராக 3 மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 2) 59 பந்துகளில் 128.81 ஸ்ட்ரைக் ரேட்டில் 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்த இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 36 பந்துகளில் 46 ரன்கள் எடுத்ததே கில்லின் இதுவரையிலான சிறந்த ஆட்டமாக உள்ளது. அவரது மற்ற 4 போட்டிகளின் ரன்களும் ஒற்றை இலக்கங்களில் உள்ளன. கடைசியாக, லக்னோவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், அவர் 9 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை, வெற்றி பெற்ற காம்பினேஷனை மாற்ற மாட்டார்கள். அதுவும் தொடரை நிர்ணயிக்கும் ஒரு போட்டியில் பரிட்சார்த்த முயற்சிகள் ஏதும் எடுக்கும் வாய்ப்பு குறைவு. எனவே, இந்தியாவின் ஆடும் லெவனில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்திய டி20 அணி:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்
இந்திய உத்தேச அணி:
சுப்மான் கில்/ பிரித்வி ஷா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்/ உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil