Advertisment

IND vs NZ 3rd T20: அதிரடிக்கு கை கொடுக்கும் அகமதாபாத் மைதானம்; 2-வது பேட் செய்யும் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு?

தொடரைக் கைப்பற்றப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நாளை புதன் கிழமை குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

author-image
WebDesk
Jan 31, 2023 16:37 IST
Ind vs NZ, 3rd T20I; Pitch Report and weather update in tamil

India vs New Zealand, 3rd T20I - Ahmedabad

New Zealand Tour of India 2023, 3rd T20I Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் பறிகொடுத்தது. தற்போது அந்த அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது. இதனால் தொடர் 1 -1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

Advertisment

இந்த நிலையில், இந்த தொடரைக் கைப்பற்றப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நாளை புதன் கிழமை (பிப்ரவரி 1 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer

இந்தியா vs நியூசிலாந்து 3வது டி20 வானிலை அறிக்கை:

நாளை போட்டி நடக்கும் அகமதாபாத்தில் 29% ஈரப்பதம் மற்றும் மணிக்கு 8 கி.மீ காற்றின் வேகம். வெப்பநிலை 29°C சுற்றி இருக்கும். விளையாட்டின் போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா vs நியூசிலாந்து 3வது டி20 பிட்ச் அறிக்கை:

நரேந்திர மோடி ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானமாக உள்ளது. இரண்டு இன்னிங்ஸிலும் சிறந்த உதவியாக இருக்கும். ஆட்டம் முன்னேறும்போது, ​​வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் கை கொடுக்கும். அதே சமயம் விளையாட்டின் நடுப் பிரிவில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர்:

இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 171 ஆக உள்ளது.

சேஸிங் அணிகளின் பதிவு:

இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி இங்கு சிறப்பான சாதனைகளை படைத்துள்ளது. இந்த மைதானத்தில் 60 சதவீத வெற்றியை தக்கவைத்துள்ளனர்.

இரு அணி உத்தேச வீரர்கள் பட்டியல்:

இந்தியா: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சிவம் மாவி, யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

#Cricket #Sports #Indian Cricket #T20 #Hardik Pandya #India Vs New Zealand #Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment