IND vs NZ T20 Full Scorecard: யாருமே எதிர்பார்க்காத… ஏன் இந்திய அணியே எதிர்பார்க்காத வெற்றி நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கோலி & கோ-வுக்கு கிடைத்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் மூன்று போட்டிகளையும் வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது டீம் இந்தியா. அதிலும், சூப்பர் ஓவரில் வென்ற மூன்றாவது டி20 ‘தீப்பொறி திருமுகம்’ ரகம்.
After a cracking 3rd T20I, #TeamIndia is all set to play the 4th one at Wellington.
Will @imVkohli field the same XI or will he try out other options?#NZvIND pic.twitter.com/yt3uLyWYe9
— BCCI (@BCCI) January 31, 2020
இந்நிலையில், இன்று (ஜன.31) வெல்லிங்டனில் நான்காவது டி20 போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மனீஷ் பாண்டே 50 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்றார்.
தொடர்ந்து களமிறங்கிய நியூஸி., 20 ஓவர்களில் 165/7 ரன்கள் எடுக்க, போட்டி டிராவானது. அடுத்த நடந்த டிராமாக்களை கீழே லைவ் கமெண்ட்ரியாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த த்ரில் ஃபீலை அனுபவியுங்கள்.
Highlights
சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.
கோலி – 4
கோலி – 2
ராகுல் – அவுட்
ராகுல் – 4
ராகுல் – 6
இந்திய சூப்பர் ஓவர் பேட்ஸ்மேன்ஸ் – லோகேஷ் ராகுல், கோலி
பந்து வீசுபவர் – டிம் சவுதி
இந்தியாவுக்கு 14 ரன்கள் இலக்கு
மன்ரோ – 0 ரன்கள்
மன்ரோ – 4 ரன்கள்
Seifert – அவுட்
Seifert – 2 ரன்கள்
Seifert – 4 ரன்கள்
Seifert – 2 ரன்கள்
நியூசிலாந்து பேட்டிங் – Seifert/Munro களமிறங்கியுள்ளனர்
பந்துவீசுபவர் – பும்ரா</p>
இந்தக் கொடுமைய எங்க போய் சொல்றது!!!
இந்தியா – நியூசிலாந்து நான்காவது டி20 போட்டியும் டிராவாகியுள்ளது. நியூசிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்ததால் போட்டி டிராவாகி, மீண்டும் சூப்பர் ஓவரை நோக்கி சென்றுள்ளது.
இந்திய பவுலர்களை லெப்டில் டீல் செய்து கொண்டிருந்த காலின் மன்ரோ 64 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். தொடர்ந்து, டாம் ப்ரூஸ் 0 ரன்களில் சாஹல் ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார்.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில், பும்ரா ஓவரில் நான்கு ரன்களில் கேட்ச் ஆனார். ஆனால், காலின் மன்ரோ பிரித்து மேய்ந்து வருகிறார். குறிப்பாக, ஷர்துள் தாகூர் பவுலிங்கை ‘இந்த வாங்கிக்க’ மோடில் சாத்துகிறார்.
லோகேஷ் ராகுல் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, மனீஷ் பாண்டே இறுதி வரை களத்தில் நின்று அரைசதம் அடித்து, இந்தியா 165-8 ரன்கள் எடுக்க உதவினார்.
100 ரன்களில் சுருண்டிருக்க வேண்டிய இந்தியா, 165 ரன்கள் வரை வந்தது பாகுபலி மொமன்ட் தான்.
லோகேஷ் ராகுல் 39 ரன்களிலும், ஷிவம் துபே 12 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 0 ரன்களிலும் வெளியேற இந்தியா ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் இஷ் சோதி பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேற, இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது.
பென்னெட் ஓவரில் ஒரு அசால்ட் ஷாட்டில் கேப்டன் கோலி கேட்ச் ஆனார். லீடிங் எட்ஜ் ஆகி கவர் திசையில் பறக்க, சான்ட்னரின் அபார கேட்சினால் 11 ரன்களில் வெளியேறினார் கோலி.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு இம்முறையும் சங்கு ஊதிவிட்டு சென்றுவிட்டார். 5 பந்துகளில் 8 ரன்கள் மட்டும் எடுத்து கேட்ச் கொடுத்து சஞ்சு வெளியேறினார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன் களமிறங்கியுள்ளனர்.
இன்றைய போட்டியிலும் வெல்லுமா இந்தியா?
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ACL காயம் காரணமாக வில்லியம்சன் விலகியதால், சவுதி இடைக்கால கேப்டனாக செயல்படுகிறார்.
இந்திய அணியில் ரோஹித், ஷமி, ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.