IND vs NZ T20 Series 2022 Tamil News: 8வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாய்த்த இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.
இந்த தொடருக்கான அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்தியாவின் இந்த படுதோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய டி20 அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒரு புதிய டி20 அணியை கட்டமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய டி20 அணியை ஆல்-ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா வழிநடத்த உள்ளார். அவரது தலைமையிலான இந்திய டி20 அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்து மூத்த வீரர் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஒருநாள் அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்
பாண்டியாவுக்கு புது தலைவலி: 3 ஸ்பின்னர்களில் யாருக்கு இடம் கொடுப்பது?
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அணியின் சுழற்பந்துவீச்சு வரிசையில் ரவி அஸ்வின் இல்லாததால், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் டி20 வடிவத்தில் தங்களை நம்பர்-ஒன் ஸ்பின்னராக நிலைநிறுத்துவதற்கான பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மேலும், அஸ்வின் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பில்லை என்பதாலும், அவரது இடத்தைப் பிடிக்க நியூசிலாந்து டி20 தொடரில் சாஹல், குல்தீப், சுந்தர் ஆகியோருக்கு தங்கள் தகுதியை நிரூபிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பையில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்திய டி20 அணி தடுமாறிய நிலையில், எதிர்காலத்தில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் அணியை நிறுத்துவதில் நிர்வாகம் தெளிவாக உள்ளது. அதோடு, அந்த முன்னணி ஸ்பின்னரை அடையாளம் காண ஆர்வமாகவும் உள்ளது.
மிக நீண்ட காலத்திற்கு முன்பு, சாஹல் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். ஆனால் டி20 உலகக் கோப்பையின் ஆறு போட்டிகளிலும் அவரை பெஞ்ச்சில் தான் அமர வைத்தனர். இதனால், அவர் தன்னை ஒரு பெரிய போட்டியில் நிரூபிக்கும் இழந்தார். குல்தீப் மற்றும் சுந்தர் விஷயத்தில் காயங்கள் பெரும் இடையூறாக இருக்கிறது. ஏனெனில் இருவரும் 2022-ன் பெரும்பகுதிக்கு விளையாடுவதை தவறவிட்டனர். ஆனால் இருவரும் நியூசிலாந்து டி20 தொடருக்கு திரும்பியதால், அவர்களது திறமையை நிரூபிக்க அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனினும், இவர்களில் எந்த வீரரின் திறனை கேப்டன் பாண்டியா பயன்படுத்துவார் என்பதில் தான் குழப்பம் நீடிக்கிறது. நியூசிலாந்து மண்ணில் அவர் தனது அணிக்கான திட்டத்தை வகுத்து வரும் நிலையில், இந்த மூன்று சுழல் வீரர்களில் யாரை அவர் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
- யுஸ்வேந்திர சாஹல்
நீண்ட காலமாக, 2022ல் அணியின் முதல் தேர்வு சுழற்பந்து வீச்சாளராக சாஹல் பார்க்கப்பட்டார். அசத்தியா லெக் ஸ்பின்னரான இவர் நடப்பு டி20 உலக கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாட முடியாமல் போனது அதிர்ச்சியைத் தான் ஏற்படுத்தியது. அடில் ரஷித், ஷதாப் கான் மற்றும் இஷ் சோதி போன்ற லெக் ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. சாஹல் விளையாடாததால் இந்தியாவுக்கான வாய்ப்பு இல்லாமல் போனது.
2022 ஆம் ஆண்டில் டி20 போட்டிகளில், சாஹல் ஓவருக்கு 6 ரன்கள் என்ற எக்கனாமி விகிதத்தில் 20 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக அவர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவரது நேர்த்தியான சாதனையைப் படைத்துள்ளார். ஆனால் நியூசிலாந்தில், அது அவ்வளவு சிறப்பாக இல்லை. ஏனெனில், அங்கு இவர் ஐந்து ஆட்டங்களில் 3 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்த முறை, சாஹல் அந்த சாதனையை சரி செய்ய ஆர்வமாக உள்ளார்.
- வாஷிங்டன் சுந்தர்
அஸ்வினுக்கு சிறந்த மாற்றாகக் கூறப்பட்ட சுந்தர் இறுதியாக நியூசிலாந்துக்கு எதிரான தனது முழுநேர டி20 பயணத்தைத் தொடங்க இருக்கிறார். தமிழக இளம் வீரரான இவர், பவர் பிளேயில் டி20 போட்டிகளில் ஓவருக்கு 6 ரன்களுக்கு குறைவான ரன்களை விட்டுக்கொடுக்கும் திறமையான பந்துவீச்சாளராக இருக்கிறார். பேட்டிங்கில் கலக்கும் இவரை லோ-ஆடரில் சிறப்பாக பயன்படுத்த முடியும்.
சுந்தரின் மிகப்பெரிய பலம் பவர் பிளேயில் சிறப்பாக பந்து வீசுவது தான். அந்த கட்டத்தில் அவர் வீசும் இரண்டு ஓவர்களை சமாளிக்க பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். மிகச்சிறந்த ஆஃப் ஸ்பின்னரான இவர், 31 டி20 போட்டிகளில் விளையாடி 7 என்ற எக்கனாமியில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் அஷ்வின் இல்லாததால், சுந்தர் டி20 வடிவத்தில் நம்பர் ஒன் ஆஃப் ஸ்பின்னராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அடித்துச் சொல்லாம்.
- குல்தீப் யாதவ்
இந்தியாவின் நம்பர் ஆல் ஃபார்மேட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என்றால் நிச்சயம் மிகையாகாது. சில மோசமான தொடர்கள் மற்றும் கேகேஆரின் மோசமான ஐபிஎல் சீசன் அவரது துயரங்களை கூட்டியது. ஆனால், டெல்லி கேபிடல்ஸுடனான ஒரு நட்சத்திர ஐபிஎல் 2022 சீசனும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நல்ல டி 20 தொடரும் குல்தீப்பிற்கு புதிய வாழ்க்கையையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது. அவர் ஐபிஎல் 2022 சீசனில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது சுழல் வித்தையை வெளிக்காட்டி இருந்தார்.
'சைனாமேன்' குல்தீப் யாதவின் பந்துவீச்சு மாறுபாடுகள், அவரின் கூக்ளிகள் மற்றும் ஃபிளிப்பர்களால் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் கண்டு இருந்தனர். குல்தீப் இந்திய அணியில் நீண்ட ரன் கொடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இம்முறை இந்திய அணியில் தனது மாயாஜாலத்தை காட்டினால், அவரை தடுப்பது கடினம்.
நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 - ஒருநாள் அணி விபரம் பின்வருமாறு:-
இந்திய டி20 அணி:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்ஷல் சிராஜ் குமார், முகமது சிராஜ் குமார், முகமது சிராஜ் குமார் சிங், உம்ரான் மாலிக்.
இந்திய ஒருநாள் அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், சக்ரன் யாதவ். மாலிக், குல்தீப் சென்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.