IND VS NZ 1st Test Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், சமீபத்தில் முடிவடைந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்தியா நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று வியாழக்கிழமை முதல் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டுள்ள நிலையில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
Toss news from Kanpur 👇
— ICC (@ICC) November 25, 2021
🇮🇳 India have won the toss and they are having a bat first. #INDvNZ | #WTC23 pic.twitter.com/W9g0EKSjA5
இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:
நியூசிலாந்து:-
டாம் லாதம், வில் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்திரா, டிம் சவுத்தி, அஜாஸ் படேல், கைல் ஜேமிசன், வில்லியம் சோமர்வில்
இந்தியா:-
ஷுப்மான் கில், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.
ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுகம்:
இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இந்த போட்டியில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தொப்பி வழங்குகிறார்.
🎥 A moment to cherish for @ShreyasIyer15 as he receives his #TeamIndia Test cap from Sunil Gavaskar – one of the best to have ever graced the game. 👏 👏#INDvNZ @Paytm pic.twitter.com/kPwVKNOkfu
— BCCI (@BCCI) November 25, 2021

முதல் நாள் ஆட்டம்:
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய புஜாரா சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

இதில், தனது 4வது அரைசதத்தை கடந்த சுப்மன் கில் 52 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்த புஜாராவும் (88 பந்துகள், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள்) சிறிது நேரத்திலே ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் ரஹானே 6 பவுண்டரியுடன் 35 ரன்கள் சேர்த்து ஜேமிசன் பந்துவீச்சில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 145 ரன்கள் சேர்த்தது.
ஸ்ரேயஸ் ஐயர் – ஜடேஜா ஜோடி அதிரடி
தொடர்ந்து களத்தில் இருந்த ஸ்ரேயஸ் ஐயர் – ஜடேஜா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனவே இந்திய அணியின் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி நான்கு விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து இருந்தது.

தொடர்ந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் – ஜடேஜா ஜோடியில் அறிமுக வீரர் ஸ்ரேயஸ் ஐயர் தனது முதல் அரைசத்தை கான்பூர் மைதானத்தில் பதிவு செய்தார். அவருடன் சேர்ந்து தட்டிக் கொடுத்து ஆடிய ஜடேஜா தனது 17வது அரைசதத்தை பதிவு செய்து, வழக்கம் போல் மட்டையைச் சுழற்றி வேடிக்கை காட்டினார்.


முதல்நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வர 6 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், சரியான வெளிச்சம் இல்லாததால் முன்னரே நிறுத்திக்கொள்ளப்பட்டது. இறுதியில் 84 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 258 ரன்களை சேர்த்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் 75 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

2ம் நாள் ஆட்டம் – ஷ்ரேயாஸ் சதம்…
நேற்று முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 258 ரன்களை சேர்ந்திருந்த நிலையில், இன்று காலை முதல் தொடங்கிய 2ம் நாள் ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் – ஜடேஜா ஜோடி களமிறங்கியது. இதில் ஜடேஜா 112 பந்துகளில் 6 பவுண்டரிகளை விரட்டி 50 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் இருந்த ஷ்ரேயாஸ் அதிரடியாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
A special moment for @ShreyasIyer15 💯
— BCCI (@BCCI) November 26, 2021
Live – https://t.co/9kh8Df6cv9 #INDvNZ @Paytm pic.twitter.com/HA7yJiB1Hg
தொடர்ந்து விளையாடிய அவர் 105 ரன்கள் (171 பந்துகள்13 பவுண்டரிகள் 2 சிக்ஸர்) சேர்த்து டிம் சவுத்தி பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர்வந்த வீரர்களில் 5 பவுண்டரியை விரட்டிய அஸ்வின் 38 ரன்களுடனும், ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட உமேஷ் 10 ரன்களுடனும் அவுட் ஆனார்கள்.
இறுதியில் 111.1வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 345 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் 105 ரன்களும், ஷுப்மன் கில் 52 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Innings Break!
— BCCI (@BCCI) November 26, 2021
That will be the end of #TeamIndia‘s innings with 345 on the board in the first innings.
Scorecard – https://t.co/WRsJCUhS2d #INDvNZ @Paytm pic.twitter.com/GeJ7A3iGRQ
முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி தேநீர் இடைவேளை வரை 26 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்தது. அப்போது தொடக்க வீரர்கள் வில் யங் 46 ரன்களும், டாம் லாதம் 23 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்நிலையில், 2ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் சேர்த்துள்ளது. தொடக்க வீரர்கள் வில் யங் – டாம் லாதம் ஜோடி அரைசதம் கடந்துள்ள நிலையில், வில் யங் 50 ரன்களுடனும், டாம் லாதம் 75 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு 10 விக்கெட்டுகளும் கையில் உள்ள நிலையில், இந்திய அணியை விட 216 ரன்கள் பின்தங்கியுள்ளது.
That will be Stumps on Day 2.
— BCCI (@BCCI) November 26, 2021
New Zealand 129/0, trail #TeamIndia by 216 runs.
Scorecard – https://t.co/WRsJCUhS2d #INDvNZ @Paytm pic.twitter.com/IvPs1Txzma
3ம் நாள் ஆட்டம் – நியூசிலாந்து பேட்டிங்
நியூசிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 57 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்த நிலையில், அந்த அணியில் வில் யங் 75 ரன்களுடனும், டாம் லாதம் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று தொடங்கிய 3ம் நாள் ஆட்டத்தில் வில் யங் 89 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லாதம் 95 ரன்களில் அக்சர் சுழலில் சிக்கி வெளியேறினார்.
பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறிய நிலையில், மாலை தேநீர் இடைவேளை வரை அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் நீண்ட நேரம் களத்தில் இருந்த ஜேமிசன் 75 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவருக்கு பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்னில் வெளியேறவே முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இதில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்களை சேர்த்துள்ளது.
Innings Break!
— BCCI (@BCCI) November 27, 2021
Ashwin picks up the final wicket as New Zealand are all out for 296. #TeamIndia lead by 49 runs.
Scorecard – https://t.co/WRsJCUhS2d #INDvNZ @Paytm pic.twitter.com/GDBqhNP0u1
Stumps on Day 3 of the 1st Test.#TeamIndia lose the wicket of Shubman Gill in the second innings. Lead by 63 runs.
— BCCI (@BCCI) November 27, 2021
Scorecard – https://t.co/WRsJCUhS2d #INDvNZ @Paytm pic.twitter.com/d4uwQrosZR
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் வில் யங் 214 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், டாம் லாதம் 282 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 95 ரன்களும் சேர்த்தனர். இந்தியா தரப்பில் சுழலில் அசத்திய அக்சர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், உமேஷ் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்தியா பேட்டிங்:
தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் 1 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். தற்போது 3ம் நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்திய அணியில் மயங்க் அகர்வால் 4 ரன்னுடனும், சேதேஷ்வர் புஜாரா 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தற்போது நியூசிலாந்து அணியை விட இந்திய அணி 63 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
4- ஆம் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி தடுமாற்றத்துடன் விளையாடியது. முன்வரிசை பேட்ஸ்மேன்களான புஜரா, கேப்டன் ரஹானே, மயங்க் அகர்வால் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனால், பின்வரிசை பேட்ஸ்மேன்கள், ஸ்ரேயஸ் அய்யர், விருத்திமான் சகா ஆகியோர் அரைசதம் அடித்தனர். அதோடு, அஸ்வின், அக்சர் படேல் சிறப்பான ஆட்டத்துடன் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.
4ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 81 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து 283 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 4 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது.
New Zealand in India, 2 Test Series, 2021Green Park, Kanpur 27 June 2022
India 345(111.1)& 234/7dec
New Zealand 296(142.3)& 165/9(98.0)
Match Ended ( Day 5 – 1st Test ) India drew with New Zealand
தொடர்ந்து வெற்றிக்கு 280 ரன்கள் தேவை என்ற நிலையில் நியூசிலாந்து அணியும், 9 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றியை பெறலாம் என்ற நிலையில் இந்திய அணியும் 5-வது நாள் ஆட்டத்தில் களமிறங்கியது. இதில் வழக்கம் போல கடைசி நாளில் இந்திய அணியின் கையே ஓங்கியது. நேற்றை 2 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கிய டாம் லாதம் அரைசதம் கடந்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த சோமர்வில்லி 36 ரன்களில் வெளியேறினார்.
அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 24 ரன்களிலும், ராஸ் டெய்லர் 2 ரன்களிலும், ஹென்றி நிகோலஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 77 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் டாம் பிலிந்தர் 2 ரன்களிலும், ரச்சின் ரவீந்தர் 6 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
அதன்பிறகு 79-வது ஓவரில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து அடுத்து வந்த கைல் ஜெமிசன் 5 மற்றும் டீம் சவுதி 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரையும் எல்பிடபிள்யூ முறையில் ஜடேஜா வீழ்த்தினார். இதனால் நியூசிலாந்து அணி 155 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஜஸ் பட்டேல், ரவீந்திர இருவரும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கர்களின் நேர்த்தியான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி போட்டியை டிரா செய்யும் முனைப்பில் சிறப்பாக முன்னேறியது. அதிலும் குறிப்பாக அறிமுக போட்டியில் களமிறங்கிய ரவீந்திரா இந்திய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்.
அஸ்வின், ஜடேஜா, அக்சர் என மாறி மாறி மாறி பந்து வீசினாலும் இந்த ஜோடியை இந்திய பந்துவீச்சாளர்களால் கடைசி வரை பிரிக்க முடியவில்லை. இதனால் இந்த போட்டி கடைசி கட்டத்தில் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி வரை களத்தில் இருந்த ரவீந்திரா நியூசிலாந்து அணியின் சூழ்நிலையை புரிந்துகொண்டு 91 பந்துகளை சந்தித்து 18 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் அஜஸ் பட்டேல் 23 பந்துகளை சந்தித்த 2 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 98 ஓவர்களில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், அக்சர் மற்றும் உமேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 3-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“