Advertisment

IND vs NZ: உலகக் கோப்பை முதல் அரைஇறுதிப் போட்டி... ஆன்லைனில் லைவ்-ஆக பார்ப்பது எப்படி?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் உலகக் கோப்பை முதல் அரையிறுதி போட்டி நாளை (நவம்பர்.15) புதன்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
IND vs NZ Live Streaming World Cup 2023 Semi Final in tamil

நடப்பு உலகக் கோப்பை தொடரில் சமபலம் பொருந்திய அணிகளாக இந்தியா - நியூசிலாந்து அணிகள் பார்க்கப்படுகிறது.

worldcup 2023 | india-vs-new-zealand: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 

Advertisment

இந்நிலையில், நாளை புதன்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து -  இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. நடப்பு உலகக் கோப்பை தொடரில் சமபலம் பொருந்திய அணிகளாக இந்தியா - நியூசிலாந்து அணிகள் பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் நெருக்கமான மற்றும் பரபரப்பான போட்டிகளில் விளையாடிய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. 

இந்த உலகக் கோப்பை லீக் கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும். 2003க்குப் பிறகு ஒரு நாக்-அவுட் போட்டியில் கூட இந்தியாவிடம் தோல்வி பெறாத நியூசிலாந்து அந்த சாதனையை தொடரவே நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இந்தப் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs NZ Live Streaming, World Cup 2023 Semi-Final: When and where to watch IND vs NZ

இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி போட்டியை லைவ் ஸ்ட்ரீம் பார்ப்பது எப்படி?  

ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டி எப்போது, ​​எங்கே நடக்கிறது?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் உலகக் கோப்பை முதல் அரையிறுதி போட்டி நாளை (நவம்பர்.15) புதன்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டி நடக்கும் நேரம்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக் கோப்பை முதல் அரையிறுதி  போட்டி பிற்பகல் 2 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது. டாஸ் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.

ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டியை இந்தியாவில் எந்த டி.வி-யில் நேரலையில் பார்க்கலாம்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக் கோப்பை முதல் அரையிறுதி போட்டி இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும். 

ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டியை இந்தியாவில் ஆன்லைனில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்ப்பது எப்படி? 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக் கோப்பை முதல் அரையிறுதி போட்டி உட்பட உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் செயலியில் இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். டிவிகள் அல்லது மடிக்கணினிகள் போன்ற பிற சாதனங்களுக்கு சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs New Zealand Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment