/indian-express-tamil/media/media_files/BLgT3fcCnAoxhG5nowzo.jpg)
ஒருநாள் போட்டிகளில், இரு அணிகளும் இதுவரை 117 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 59 முறை வெற்றி பெற்றுள்ளது.
Worldcup 2023 | india-vs-new-zealand | mumbai: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், நாளை புதன்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் போட்டியை நடத்தும் இந்தியா பழக்கமான போட்டியாளர்களான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. கடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. ஆனால், இங்கிலாத்திடம் தோல்வியுற்ற அவர்களால் கோப்பை வெல்ல முடியவில்லை.
நடப்பு உலகக் கோப்பையில் நடந்த 9 லீக் ஆட்டங்களில் ஒன்பதிலும் வெற்றி பெற்று இந்தியா டாப் ஃபார்மில் இருப்பதால், இம்முறை கதை வேறுவிதமாக இருக்கலாம். ஒயிட்-பால் கிரிக்கெட்டின் இரண்டு நவீன போட்டியாளர்களான இந்தியாவும் நியூசிலாந்தும் நெருக்கடியான நாக்-அவுட் போட்டியில் ஒன்றையொன்று எதிர்கொள்ளத் தயாராக இருப்பதால், இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்தியா vs நியூசிலாந்து - நேருக்கு நேர்:
ஒருநாள் போட்டிகளில், இரு அணிகளும் இதுவரை 117 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 59 முறை வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், நியூசிலாந்து 50 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை சிறப்பாக வென்றது.
இரு அணிகளும் கடைசியாக அக்டோபரில் 2023 உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தின் போது ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியது. அந்த போட்டியில் இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வானிலை எப்படி?
அக்குவெதர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாளை புதன்கிழமை நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தின் போது மும்பை நகரில் பெரும்பாலும் வெயில் காலநிலையை இருக்கும். மழை பெய்ய ஒரு சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை அரையிறுதி மோதலில் மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஈரப்பதம் 30 சதவீதமாக இருக்கும். வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வான்கடே பிட்ச் ரிப்போர்ட்
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் உள்ள ஆடுகளம் நாட்டிலேயே மிகவும் சமநிலையான மைதானங்களில் ஒன்றாகும். முந்தைய போட்டிகளில் இங்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்து இமாலய வெற்றி இலக்கை நிர்ணயிக்க நினைப்பது ஒரு விவேகமான விருப்பமாக இருக்கலாம்.
இருப்பினும், இது சிவப்பு மண் ஆடுகளம் என்பதால் பவுன்ஸ் அதிகம் இருக்கும். இதேபோல் பனிப் பொழிவும் ஒரு முக்கிய காரணியாக மாறக்கூடும். அதனால், டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கைத் தேர்ந்தெடுக்கலாம்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.