India vs New Zealand 1st Semi Final Match Online Streaming: உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் இந்திய வீரர்கள் அபாரமாக பந்து வீசினர். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன் எடுத்த நிலையில் மழை குறுக்கிட, ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்று (ஜூலை 10) போட்டி தொடர்ந்து நடக்க உள்ளது.
உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூலை.9) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.
இந்திய நேரப்படி இன்று(9ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை லைவாக கண்டு களிக்கலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டார் மூலம் போட்டியைக் காணலாம். உங்கள் மொபைலில் ‘ஷேர் இட்’ ஆப் வைத்திருந்தால், அதன் வாயிலாக, ஹாட்ஸ்டார் மூலம் போட்டியை காணலாம்.
தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் பிரத்யேக லைவ் கமெண்ட்ரியை நேயர்கள் காணலாம்.
மழைக்கான வாய்ப்பு – 3%
ஈரப்பதம் – 89%
காற்று – 3 km/h
அதிகபட்ச வெப்பநிலை – 19 டிகிரி செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை – 14 டிகிரி செல்சியஸ்
இன்றைய மழைக்கான வாய்ப்பு 3 சதவிகிதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.