Advertisment

உம்ரான் மாலிக் vs லாக்கி ஃபெர்குசன்: புயல் வேக பவுலர் யார்? செம்ம யுத்தம்

உம்ரான் மாலிக் விளையாடிய 14 போட்டிகளில், பெரும்பாலான ஆட்டங்களில் வேகமான பந்து வீச்சாளர் என்பதற்கான 10 லட்சம் ரொக்கப் பரிசுகளை வென்றார்.

author-image
WebDesk
New Update
IND vs NZ: Umran Malik - Lockie Ferguson fight out for the fastest pacer Tamil News

IND vs NZ: IPL rivalry set to resume as Umran Malik - Lockie Ferguson fight out for the fastest pacer tag in India vs NewZealand T20 Series Tamil News

 India vs NewZealand T20 Series- Umran Malik vs Lockie Ferguson Tamil News: இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 ஓவர் தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது.

Advertisment

நியூசிலாந்திற்கு எதிரான இந்தத் தொடரில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் அணியை ஷிகர் தவான் வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

உம்ரான் மாலிக் vs லாக்கி ஃபெர்குசன்: புயல் வேக பவுலர் யார்?

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கடந்த ஐபிஎல் சீசனில் கலக்கிய சில இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், முக்கிய வீரராக இளம் வீரர் உம்ரான் மாலிக் இருக்கிறார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்திருந்த இவர், தென்ஆப்பிரிக்க ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டெய்னால் பட்டை தீட்டப்பட்டார்.

publive-image

இவர் தனது பந்துவீச்சில் தொடர்ந்து மணிக்கு 150 வேகத்தில் வீசி மிரட்டக்கூடியவர். ஐபிஎல்லில் தொடர்ந்து 5 பந்துகளை 150 வேகத்து மேல் வீசி சாதனை படைத்திருந்தார். மேலும், அவர் விளையாடிய 14 போட்டிகளில், பெரும்பாலான ஆட்டங்களில் வேகமான பந்து வீச்சாளர் என்பதற்கான 10 லட்சம் ரொக்கப் பரிசுகளை வென்றார்.

publive-image

அவர் தற்போது நியூசிலாந்து தொடரில் இடம் பிடித்துள்ள நிலையில், அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில், நியூசிலாந்து அணி அதன் வசமும் ஒரு தரமான வேகப்பந்து வீச்சாளரை கொண்டுள்ளது. லாக்கி பெர்குசன் தான் அந்த வேகப் புயல். ஐபிஎல் 2022 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி இருந்த இவர் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுக்கள் உட்பட 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரும் மணிக்கு 157.3 கிமீ வேகத்தில் வீசி மிரட்டி இருந்தார்.

publive-image

உம்ரான் மாலிக்கின் இந்தியா வாய்ப்பு?

மாலிக் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு ஒன்பது ஓவர்கள் மட்டுமே வீசினார்.

மாலிக்கின் வேகம் பார்ப்பதற்கு மூச்சடைக்கக் கூடியதாக இருந்தாலும், அவர் தனது லைன் மற்றும் லென்த்ஸில் ஒழுங்கற்றவராக இருந்தார்.

publive-image

நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு, மாலிக்கிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறை, 22 வயதான அவர் பயிற்சியாளர்களுடன் கடுமையாக உழைத்துள்ளார்.

மாலிக் ஒரு யார்க்கரையும் உருவாக்கியுள்ளார். மேலும் அவரது லைன் மற்றும் லென்த்ஸில் சிறிது வேலை செய்துள்ளார்.

வி.வி.எஸ்.லக்ஷ்மண் உம்ரானுடன் சில கூடுதல் மணிநேரங்களை செலவிட்டதால், அவருக்கு இந்த முறை நிறைய வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

India Vs New Zealand Sports Cricket Indian Cricket Team Indian Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment