IND vs PAK: சதம் அடித்து ஃபினிஷ் செய்த கோலி... பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India Match

இந்தியா vs பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி 2025, லைவ் கிரிக்கெட் ஸ்கோர், துபாய்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Pakistan LIVE Cricket Score, Champions Trophy 2025

 

Advertisment
Advertisements

முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால்,  ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும். 

இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மிகவும் நிதானமாக விளையாடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சவுத் ஷகில் 62 ரன்களும் முகமது ரிஸ்வான் 46 ரன்களும் எடுத்தனர். 

இந்திய அணியில்  குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்ட்டியா 2 விகெட்டுகளையும் வீழ்த்தினர். ஜடேஜா, ஹரிஷ் ரானா, அக்சர் படே தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, சுப்மன் கில் அதிரடியாக விளையாடினர். ரோஹித் சர்மா 20 ரன்னில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து, வந்த கோலி நிதானமாக விளையாடினார். அடித்து ஆடிய சுப்மன் கில் 46 ரன்களில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர், கோலியுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தனர். கோலி அரை சதம் அடித்ததைத் தொடர்ந்து, ஸ்ரேயஸ் ஐயர் அரை சதம் அடித்தார். ஆனால், விரைவிலேயே அவுட் ஆகி வெளியே சென்றார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 8 ரன்கள் மட்டும் எடுத்து நடையைக் கட்டினார். ஆனால், தொடர்ந்து நிதானமாக ஆடிய கோலி இறுதியில் சதம் அடித்து ஃபினிஷ் செய்தார். இந்திய அணி 42.3 ஓவர்களில் 244 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். ஸ்ரேயஸ் ஐயர் 56 ரன்கள் அடித்தார். 

இந்தப் போட்டியில் பங்கேற்க துபாய் வந்துள்ள பாகிஸ்தான் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த அணியின் முன்னணி வீரரான ஃபகார் ஜமான் காயம் காரணமாக விலகியுள்ளார். இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில்  வியாழன் அன்று வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இதற்கிடையில், கராச்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. சாம்பியன் டிராபி தொடரில், இந்த இரு அணிகளும் கடைசியாக 2017 ஆம் ஆண்டில் நடந்த இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டன. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பை முத்தமிட்டது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தான் களமிறங்கும். ஆனால், வலுவான ஃபார்மில் இருக்கும் இந்தியா அதற்கு முட்டுக்கட்டை போட நினைக்கும். அதனால், இவ்விரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

இப்போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல்களில் நேரலையில் பார்க்கலாம். ஆன்லைனில் ஜியோஹாட்ஸ்டார் இணையப் பக்கம் மற்றும் ஆப்களில் நேரலையில் பார்க்கலாம்.

 இந்தியா vs பாகிஸ்தான் - இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல் 

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது. ஷமி

பாகிஸ்தான்: பாபர் அசாம், இமாம்-உல்-ஹக், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆகா, தயாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது.

  • Feb 23, 2025 21:51 IST

    சதம் அடித்து ஃபினிஷ் செய்த கோலி... பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

    விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்களை அடித்து ஃபினிஷ் செய்ததோடு மட்டுமில்லாமல் இந்திய அணியை வெற்றிகு அழைத்துச் சென்றார். 42.3 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.



  • Feb 23, 2025 21:42 IST

    வெற்றியை நோக்கி இந்திய அணி... கோலி சதம் அடிப்பாரா?

    விராட் கோலி - அக்சர் படேல் விளையாடி வருகின்றனர். விராட் கோலி 88 ரன்கள் எடுத்துள்ளார். வெற்றி பெற 15 ரன்களே தேவை என்பதால் விராட் கோலி சதம் அடிப்பரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



  • Feb 23, 2025 21:38 IST

    ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா அவுட்

    நிதானமாக விளையாடி அரை சதம் அடித்த ஸ்ரேயஸ் ஐயர், 67 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அவருக்கு அடுத்து, ஹர்திக் பாண்டியா விளையாட வந்தார். ஹர்திக் பாண்டியாவும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.



  • Feb 23, 2025 21:28 IST

    ஸ்ரேயஸ் ஐயர் அரை சதம்

    விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக அடித்து ஆடிய ஸ்ரேயஸ் ஐயர் 63 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். விராட் கொலி - ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் வெற்றியை நோக்கி இந்திய அணியை அழைத்துச் செல்கின்றனர்.



  • Feb 23, 2025 20:41 IST

    அரைசதம் அடித்தார் விராட் கோலி

    நிதானமாக விளையாடிய விராட் கோலி 61 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அரைசதம் எடுத்தார். விராட் கோலி நிதானமாக ஆடி வருகிறார். அவருடன் ஸ்ரேயஸ் ஐயர் ஆடி வருகிறார்.  



  • Feb 23, 2025 20:28 IST

    அரை சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்... 46 ரன்களில் அவுட்

    இந்திய அணி 17.3 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்திருந்தபோது, 46 ரன்கள் அடித்திருந்த சுப்மன் கில், அப்ரர் அஹமது பந்தில் போல்ட் அவுட் ஆகி அரை சதத்தை அடிக்காமல் தவறவிட்டார்.  இதையடுத்து, ஸ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்து கோலியுடன் ஜோடி சேர்ந்தார்.



  • Feb 23, 2025 19:36 IST

    பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை தெறிக்கவிடும் சுப்மன் கில்

    ரோஹித் சர்மா அவுட் ஆனாலும், மறுமுனையில் இருந்த சுப்மன் கில் பவுண்டரிகளாக அடித்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்து வருகிறார். இந்தியா 9.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 34 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களை எடுத்துள்ளார். 



  • Feb 23, 2025 19:23 IST

    242 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்; இந்தியா அதிரடி பேட்டிங்... ரோஹித் சர்மா அவுட்

    பாகிஸ்தான் 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ரோஹித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கி அதிரடியாக விளையாடினர். 6.2 ஓவர்களில் 38 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷாஹின் அஃப்ரிதி பந்தில் ரோஹித் சர்மா அவுட் ஆனார். அடுத்து விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தார். சுப்மன் கில் அதிரடியாக விளையாட் வருகிறார். ரோஹித் சர்மா 15 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே அடித்தார்.



  • Feb 23, 2025 18:29 IST

    இந்தியா வெற்றி பெறுவதற்கு 242 ரன்கள் இலக்கு 

    இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 242 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தரப்பில் ஷகீல் 62 ரன்களும், ரிஸ்வான் 46 ரன்களும் குவித்தனர். இந்திய பௌலர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.



  • Feb 23, 2025 17:54 IST

    ரன்களை குவிக்க தடுமாறும் பாகிஸ்தான்

    பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து ரன்களை குவிக்க தொடர்ந்து தடுமாறி வருகிறது. ஷகீல் மற்றும் ரிஸ்வான் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 44 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 206 ரன்களை அடித்துள்ளது.



  • Feb 23, 2025 17:28 IST

    5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பாகிஸ்தான்

    பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 62 ரன்கள் எடுத்த ஷகீல், ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதேபோல், ரிஸ்வானின் விக்கெட்டை அக்ஸர் பட்டேல் வீழ்த்தினார். மேலும், 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஜடேஜா பந்து வீச்சில் தாஹிர் அவுட்டானார். இந்நிலையில், 38 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை பாகிஸ்தான் எடுத்துள்ளது.



  • Feb 23, 2025 17:02 IST

    அரை சதம் விளாசிய ஷகீல்

    பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் அரை சதம் அடித்தார். தற்போது வரை 68 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 54 ரன்களை அவர் குவித்துள்ளார். மறுபுறம் 72 பந்துகளில் 42 ரன்களை ரிஸ்வான் அடித்துள்ளார். 32 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 142 ரன்களை எடுத்துள்ளது.



  • Feb 23, 2025 16:48 IST

    நிதானமாக ஆடி வரும் பாகிஸ்தான்

    பாகிஸ்தான் அணி தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி, 30 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் குவித்துள்ளனர். ஷகீல் 44 ரன்களுடனும், ரிஸ்வான் 39 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.



  • Feb 23, 2025 16:12 IST

    20 ஓவர்கள் முடிவில் 79 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்

    பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 79 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் 13 ரன்களுடனும், சவுத் ஷகீல் 20 ரன்களுடனும் தற்போது களத்தில் உள்ளனர்.



  • Feb 23, 2025 15:44 IST

    14 ஓவர்களுக்கு 61 ரன்கள்

    பாகிஸ்தான் அணி 14 ஓவர்களுக்கு 61 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் இரு தொடக்க ஆட்டக்காரர்களும் ஆட்டமிழந்த நிலையில், ஷகீல் மற்றும் ரிஸ்வான் களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் முறையே 8 மற்றும் 7 ரன்கள் அடித்துள்ளனர்.



  • Feb 23, 2025 15:25 IST

    10 ஓவர் முடிவில் 52 ரன்கள் குவித்த பாகிஸ்தான்

    பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 52 ரன்களை குவித்துள்ளது. பாபர் அஸாம் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்திய நிலையில், இமாம் உல் ஹக்கை, அக்ஸார் பட்டேல் ரன் அவுட் செய்தார். இதனால், அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறுகிறது.



  • Feb 23, 2025 15:19 IST

    பாபர் அஸாம் விக்கெட்டை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா

    பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பாபர் அஸாமின் விக்கெட்டை, ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். 26 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களை பாபர் அஸாம் குவித்திருந்தார். இந்நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில், கே.எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து பாபர் அஸாம் பெவிலியன் திரும்பினார்.



  • Feb 23, 2025 14:58 IST

    5 ஓவர்களில் 25 ரன்கள் குவித்த பாகிஸ்தான்

    பாகிஸ்தான் அணி 5 ஓவர்களில் 25 ரன்கள் சேர்த்து நிதானமாக ஆடி வருகிறது. இதில், பாபர் அஸாம் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் ரன்களை கணிசமாக உயர்த்தும் நோக்கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.



  • Feb 23, 2025 14:45 IST

    2 ஓவர்களில் 10 ரன்கள் குவிப்பு

    பாபர் அஸாம் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் நிதானமாக ரன்கள் குவித்து வருகின்றனர். குறிப்பாக, 2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 10 ரன்களை எட்டியுள்ளது.



  • Feb 23, 2025 14:37 IST

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இமாம், பாபர்

    பாகிஸ்தான் அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அஸாம் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இந்த ஜோடி முதல் ஓவரில் 6 ரன்களை சேர்த்துள்ளது.



  • Feb 23, 2025 14:29 IST

    ஒட்டுமொத்தமாக சிறப்பான பங்களிப்பு தேவை - ரோகித் ஷர்மா

    இந்த ஆடுகளம் மெதுவானதாக இருந்தாலும், தங்களிடம் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர் என இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும், போட்டியில் வெற்றிபெற பேட்டிங் மற்றும் பௌலிங் என ஒட்டுமொத்தமாக சிறப்பான பங்களிப்பு அளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Feb 23, 2025 14:20 IST

    டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான்

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, கணிசமான ரன்களை சேர்த்து கடினமான இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயிப்போம் என ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.



India Vs Pakistan Champions Trophy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: