Advertisment

வரலாறை மாற்றிய பாகிஸ்தான்: முதல்முறையாக உலகப் போட்டியில் இந்தியாவை வென்றது

India vs Pakistan T20 World Cup Live streaming, live score and live updates in tamil: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 152 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியசத்தில் வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ind vs pak live match tamil: Ind vs pak live score and match highlights tamil

India vs Pakistan T20 World Cup match highlights in tamil: 7வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான 'சூப்பர் 12' சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு 7:30 மணிக்கு நடத்த ஆட்டத்தில் கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

Advertisment

இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கையில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா (0) மற்றும் கேஎல் ராகுல் (3) அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் வந்த கேப்டன் கோலி - சூர்யகுமார் யாதவ் ஜோடியில் 1 சிக்ஸர் 1 பவுண்டரியை துரத்திய சூர்யகுமார் 11 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

இதனால் இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் மட்டுமே சேர்த்தது. எனினும், கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்க விட்டு ரன் ரேட்டை உயர்த்தினார். எனவே இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் குவித்தது. தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட் 30 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் சேர்த்த நிலையில் ஷதாப் கான் வீசிய 12.2 ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானம் காட்டிய கேப்டன் கோலி அரைசதம் கடந்தார்.

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி 49 பந்துகளில் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் சேர்த்து ஷாஹீன் அஃப்ரிடி வீசிய 18.4 ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்து ஜடேஜா 13 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 11 ரன்னிலும் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை சேர்த்தது. எனவே பாகிஸ்தான் அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணியின் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை சாய்த்த பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 2 விக்கெட்டையும், ஹரிஸ் ரவுப் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 152 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆஸம் - முகமது ரிஸ்வான் ஜோடி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தது. மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் கேப்டன் பாபர் ஆஸம் 40 பந்துகளிலும், முகமது ரிஸ்வான் 42 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர்.

பந்துவீச திணறிய இந்திய அணியால் இந்த ஜோடியை இறுதிவரை உடைக்க முடியவில்லை. கடைசி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் பந்துவீச்சை தும்சம் செய்த கேப்டன் பாபர் ஆஸம் - முகமது ரிஸ்வான் ஜோடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 17.5 ஓவரிலே எட்டிப்பிடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதனால் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த அசத்தலான வெற்றியின் மூலம் டி-20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் இந்தியாவை முதல் முறை வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. களத்தில் இறுதிவரை இருந்து பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பாபர் கேப்டன் ஆஸம் 52 பந்துகளில் 2 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் சேர்த்தார். அவருக்கு கைகொடுத்து ஆடிய முகமது ரிஸ்வான் 55 பந்துகளில் 3 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 23:05 (IST) 24 Oct 2021
    இந்தியாவை வீழ்த்தி வரலாற்றை மாற்றிய பாகிஸ்தான்; 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 152 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசிவரை விக்கெட்டை இழக்காத அந்த அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆஸம் - முகமது ரிஸ்வான் ஜோடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 17.5 ஓவரிலே எட்டிப்பிடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தது.


  • 22:48 (IST) 24 Oct 2021
    விக்கெட் எடுக்க திணறும் இந்தியா; வெற்றியை நோக்கி பாகிஸ்தான்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 152 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பாகிஸ்தான் அணி தற்போதுவரை விக்கெட் இழப்பின்றி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி 16 ஓவர்கள் 128 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் பாகிஸ்தான் 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றியை ருசிக்கும்.


  • 22:40 (IST) 24 Oct 2021
    முகமது ரிஸ்வான் அரைசதம்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 152 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பாகிஸ்தான் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்தார். அவர் 42 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 54 ரன்களை சேர்த்தார்.


  • 22:31 (IST) 24 Oct 2021
    கேப்டன் பாபர் ஆஸம் அரைசதம்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 152 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பாகிஸ்தான் அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாபர் ஆஸம் அரைசதம் கடந்தார். அவர் 40 பந்துகளில் 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்தார்.


  • 22:20 (IST) 24 Oct 2021
    10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 152 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பாகிஸ்தான் அணி நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆஸம் - முகமது ரிஸ்வான் ஜோடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துள்ளது. எனேவ 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 81 ரன்களை சேர்த்துள்ளது.


  • 22:18 (IST) 24 Oct 2021
    10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 152 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பாகிஸ்தான் அணி நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆஸம் - முகமது ரிஸ்வான் ஜோடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துள்ளது. எனேவ 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 81 ரன்களை சேர்த்துள்ளது.


  • 22:04 (IST) 24 Oct 2021
    இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் பாகிஸ்தானுக்கு 152 ரன்கள் இலக்கு!

    பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை சேர்த்துள்ளது. எனவே பாகிஸ்தான் அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


  • 22:04 (IST) 24 Oct 2021
    பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் அணி!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 152 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பாகிஸ்தான் அணி நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆஸம் - முகமது ரிஸ்வான் ஜோடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துள்ளது. எனேவ பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்களை சேர்த்துள்ளது.


  • 22:01 (IST) 24 Oct 2021
    பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் அணி!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 152 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பாகிஸ்தான் அணி நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆஸம் - முகமது ரிஸ்வான் ஜோடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துள்ளது. எனேவ பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்களை சேர்த்துள்ளது.


  • 21:25 (IST) 24 Oct 2021
    இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் பாகிஸ்தானுக்கு 152 ரன்கள் இலக்கு!

    பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை சேர்த்துள்ளது. எனவே பாகிஸ்தான் அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


  • 21:12 (IST) 24 Oct 2021
    கோலி அவுட்!

    பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் அரைசதம் கடந்த கேப்டன் 57 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.


  • 21:03 (IST) 24 Oct 2021
    கோலி அரை சதம்

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலி அரை சதம் அடித்துள்ளார்


  • 20:52 (IST) 24 Oct 2021
    15 ஓவரில் 100 ரன்களை தொட்டது இந்தியா

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது


  • 20:46 (IST) 24 Oct 2021
    14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 96/4

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 14 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது


  • 20:39 (IST) 24 Oct 2021
    ரிஷப் பண்ட் அவுட்

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷாதப் கான் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்


  • 20:34 (IST) 24 Oct 2021
    அதிரடி காட்டிய ரிஷப்; அடுத்தடுத்து 2 சிக்ஸ்

    இந்திய அணி 12 ஓவர் முடிவில் 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது


  • 20:06 (IST) 24 Oct 2021
    பவர் பிளே முடிவில் இந்திய அணி!

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்களை இழந்து 36 ரன்களை சேர்த்துள்ளது.


  • 20:02 (IST) 24 Oct 2021
    தொடரும் விக்கெட் சரிவு!

    பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 1 பவுண்டரி 1 சிக்ஸரை பறக்கவிட்டு அவுட் ஆனார்.


  • 19:44 (IST) 24 Oct 2021
    கேஎல் ராகுல் அவுட்!

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் சேர்த்த தொடக்க வீரர் கேஎல் ராகுல் போல்ட் அவுட் ஆனார்.


  • 19:41 (IST) 24 Oct 2021
    ரோஹித் சர்மா அவுட்!

    டி 20 உலகக்கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் ரோஹித் சர்மா.


  • 19:39 (IST) 24 Oct 2021
    ரோஹித் சர்மா அவுட்!

    டி 20 உலகக்கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் ரோஹித் சர்மா.


  • 19:32 (IST) 24 Oct 2021
    இந்திய அணி முதலில் பேட்டிங்!

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் ஜோடி களமிறங்கியுள்ளது. பாகிஸ்தான் அணி சார்பில் முதல் ஓவரை ஷாஹீன் அஃப்ரிடி வீசுகிறார்.


  • 19:18 (IST) 24 Oct 2021
    இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு!

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 7:30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.


  • 19:14 (IST) 24 Oct 2021
    இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்!

    இந்தியா (விளையாடும் XI): ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா

    பாகிஸ்தான் (விளையாடும் XI): பாபர் ஆஸம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹரிஸ் ரவுப், ஷாஹீன் அஃப்ரிடி


  • 18:45 (IST) 24 Oct 2021
    பாகிஸ்தான் அணிக்கெதிரான டி-20 உலக கோப்பை ஆட்டங்களில் கேப்டன் கோலி இதுவரை...

    இதுவரை டி20 உலகக்கோப்பை போட்டிகளில் மூன்று முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியுள்ள கேப்டன் விராட் கோலி 78*, 36*, 55* என ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.


  • 18:23 (IST) 24 Oct 2021
    இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் முந்தைய ரெக்கார்டுகள்!

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்தியாவை வீழ்த்தியதே கிடையாது. 50 ஓவர் உலக கோப்பையில் 7 முறையும், 20 ஓவர் உலக கோப்பையில் 5 முறையும் இந்தியாவிடம் தோற்று இருக்கிறது.

    மேலும், ஒட்டுமொத்த சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் இந்தியாவும், ஒன்றில் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.


  • 18:10 (IST) 24 Oct 2021
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ கணித்துள்ள உத்தே வீரர்கள் பட்டியல்!

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

    பாகிஸ்தான்: பாபர் ஆஸம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி அல்லது ஹைதர் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுப்


  • 17:59 (IST) 24 Oct 2021
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ கணித்துள்ள உத்தே வீரர்கள் பட்டியல்!

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

    பாகிஸ்தான்: பாபர் ஆஸம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி அல்லது ஹைதர் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுப்


  • 17:55 (IST) 24 Oct 2021
    இந்திய அணியின் துருப்பு சீட்டுகள்!

    பேட்டிங்: கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா

    பந்துவீச்சு: பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி

    விராட் கோலி தலைமையிலான இந்த படை நெருக்கடியின்றி சாதுர்யமாக விளையாடினால் இந்திய அணி வெற்றிக்கனியை பறித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.


  • 17:51 (IST) 24 Oct 2021
    டி 20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சாதனை!

    2007 டர்பன் - போல்ட் அவுட் முறையில் பாகிஸ்தானை வென்றது இந்தியா.

    2007 ஜோகன்னஸ்பர்க் - 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

    2012 கொழும்பு - இந்தியா பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

    2014 டாக்கா - பாகிஸ்தானை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    2016 - கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்தியா.


  • 17:42 (IST) 24 Oct 2021
    டி20 உலக கோப்பை: வரலாற்றை மாற்றுமா பாகிஸ்தான்? இந்தியாவுடன் இன்று பலப்பரீட்சை!

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 7:30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


  • 17:39 (IST) 24 Oct 2021
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.


Sports Cricket Indian Cricket Team T20 Worldcup India Vs Pakistan Pakistan Babar Azam Captain Virat Kholi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment