மெல்போர்னில் மழை உறுதி: இந்தியா- பாகிஸ்தான் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா?
வருகிற ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஒருவேளை கைவிடப்பட்டால் என்ன ஆகும்? என்று ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஒருவேளை கைவிடப்பட்டால் என்ன ஆகும்? என்று ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
IND vs PAK: Is there a “RESERVE DAY” if Rain washes out T20 World Cup 2022 games Tamil News
Melbourne weather update for India vs Pakistan T20 World Cup clash Tamil News: 8 -வது டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த 16 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. வருகிற நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் தகுதிச் சுற்று ஆட்டங்களுடன் இன்றுடன் நிறைவடைந்தன. தொடர்ந்து சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நாளை சனிக்கிழமை (அக்டோபர் 22 ஆம் தேதி) முதல் தொடங்குகின்றன.
Advertisment
சிட்னியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. மறுநாள் ஞாயிற்றுகிழமை (அக்டோபர் 23 ஆம் தேதி) இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில் கிரிக்கெட்டில் பரம எதிரியாக பாகிஸ்தானை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து சந்திக்கிறது.
மெல்போர்னில் 95% மழைக்கு வாய்ப்பு
Advertisment
Advertisements
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் மெல்போர்ன் மைதானத்தில் 95 சதவீதம் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அன்றைய நாள் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"மெல்போர்ன் பகுதியில் மேகமூட்டம் நிலவும். மிக அதிக (95%) மழைக்கான வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் காலை மற்றும் பிற்பகலில் இருக்கும். காலை மற்றும் மதியம் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. லேசான காற்று தென்மேற்கு திசையில் பகலில் 15 முதல் 20 கிமீ/மணி வேகத்தில் வீசும் பின்னர் பிற்பகலில் தெற்கு நோக்கி வீசும்" என்று ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரசிகர்கள் கவலை
இந்த போட்டிக்காக ஏற்கனவே அனைத்து (50,000) டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தப் போட்டியை சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் தொலைக்காட்சி நேரலை, மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் தாவல்கள் செயலி நேரலையில் பார்ப்பார்கள் மற்றும் பின்பற்றுவார்கள். இந்த நிலையில், மெல்போர்ன் மைதானத்தில் 95 சதவீதம் மழைக்கு வாய்ப்பு என்ற செய்தி ரசிர்களை கவலையடையச் செய்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் நடக்கும் மெல்போர்ன் மைதானத்தில் மட்டுமல்லாது, சிட்னி, ஹோபார்ட் போன்ற மைதானங்கள் இருக்கும் பகுதிகளிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான சூப்பர் 12 சுற்றின் தொடக்க போட்டி கூட நடக்க சாத்தியமில்லை என்று தெரிகிறது.
இதனிடையே, வருகிற ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஒருவேளை கைவிடப்பட்டால் என்ன ஆகும்? என்று ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கேள்வியெழுப்பி வருகிறார்கள். அப்படி போட்டி கைவிடப்படும் போது, இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்து கொள்ளும். அதன்படி, தலா ஒரு புள்ளியுடன் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற இன்னும் 4 போட்டிகள் மீதம் இருக்கும்.
நடப்பு டி20 உலகக் கோப்பையையில் தகுதிச் சுற்று மற்றும் சூப்பர் 12 சுற்று ஆட்டங்களுக்கு மறு போட்டியோ அல்லது போட்டியின் மறு அட்டவணையோ இருக்காது. இதேபோல், இந்தியா - பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகள் மோதும் போட்டிக்கு என ஐசிசி எந்த ரிசர்வ் நாளையும் வைத்திருக்கவில்லை என்பது தான் நிதர்சன உண்மையாகும். மேலும், ஆட்டம் வீணாகும் ஒவ்வொரு அணிக்கும் இதே தான் நிலை.
ஆனால், போட்டியை அவுஸ்திரேலியாவில் உள்ள வேறு நகரத்திற்கு மாற்றலாமா? என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உண்மையில், இவ்வளவு குறுகிய கால அறிவிப்பில் அதைச் செய்வது நிச்சயம் கடினமான ஒன்றாகும். மேலும், போட்டியை ஒரு நகரத்திலிருந்து மற்றொன்றுக்கு நகர்த்துவது தொடர்பான விஷயத்தில் பல லாஜிஸ்டிக் சிக்கல்களும் உள்ளன.