Advertisment

IND vs PAK: 'இம்ரான் கானை ரிலீஸ் பண்ணுங்க': நியூயார்க் ஸ்டேடியத்தில் பேனருடன் பறந்த விமானம் - வீடியோ

டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்த நியூயார்க் ஸ்டேடியத்தின் மீது ‘இம்ரான் கானை விடுவியுங்கள்’ என்ற பேனருடன் குட்டி விமானம் ஒன்று பறந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
IND vs PAK Release Imran Khan  banner flies over New York Stadium during T20 World Cup match Tamil News

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான், அந்நாட்டின் 22-வது பிரதமராக 2018 முதல் 2022 வரை பதவி வகித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

T20 World Cup 2024 | India Vs Pakistan: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2  ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அரங்கேறும் 19-வது லீக் ஆட்டத்தில் ஏ-பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs PAK: Aircraft with ‘Release Imran Khan’ banner flies over New York Stadium during T20 World Cup match

இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்த நியூயார்க் ஸ்டேடியத்தின் மீது ‘இம்ரான் கானை விடுவியுங்கள்’ என்ற பேனருடன் குட்டி விமானம் ஒன்று பறந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. 

சிறையில் இம்ரான் கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான், அந்நாட்டின் 22-வது பிரதமராக 2018 முதல் 2022 வரை பதவி வகித்தார். தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், அவரது ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

மேலும், பரிசுப்பொருட்களை அரசு கருவூலமான தோஷகானா என்ற துறையில் ஒப்படைக்காமல் ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதேபோல், அரசின் ரகசியங்களை கசியவிட்டதாகவும், பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வன்முறையை தூண்டியதாகவும் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள சிறையில் கடந்த பிப்ரவரி முதல் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, பிரதமராக இருந்தபோது அரசின் ரகசியங்களை கசியவிட்டதாக பதியப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பரிசுப்பொருள் ஊழல் வழக்கில் இம்ரான் கானும் அவரது மனைவி புஷ்ரா பிபியும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 

அத்துடன் இம்ரான் கான் அவரது மனைவி, 10 ஆண்டுகளுக்கு அரசு பதவிகள் வகிக்கவும் தடைவிதிக்கப்பட்டது. இருவருக்கும் 787 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. இம்ரான் கான் முதலில் பாகிஸ்தானின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 

அவர் மீதான நான்கு வழக்குகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில், இந்த வார தொடக்கத்தில் அரசு ரகசியங்கள் கசிந்தது தொடர்பான வழக்கில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்அவரது  சிறைத்தண்டனையை ரத்து செய்தது என்று ராய்ட்டர்ஸ் செய்து முகமை தெரிவித்துள்ளது.

‘இம்ரான் கானை விடுவியுங்கள்’ 

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது, இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஷாஹீன் அப்ரிடியின் ஓவரில் விளையாடியதை அடுத்து, மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது மைதானம் மீது பறந்த குட்டி விமானம்  ‘இம்ரான் கானை விடுவியுங்கள்’ என்ற பேனரை ஏந்தியவாறு பறந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிட்டப்பட் நிலையில், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கிரிக்கெட் போட்டிகளில் இம்ரான் கானின் ரசிகர்களும் ஆதரவாளர்களும் இது போன்ற பேனர்களை பறக்க விடுவது இது முதல் முறைஅல்ல. உலகக் கோப்பைக்கு முன்னதாக, அயர்லாந்தில் பாகிஸ்தானின் டி20 தொடரின் போது, பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானிடம் ஒரு இம்ரான் கான் ஆதரவாளர் ஆட்டோகிராப் வாங்குவதுடன் ‘இம்ரான் கானை விடுவியுங்கள்’ என்று குறிப்பிட்ட பேனர் காணப்பட்டது.

இங்கிலாந்தில் 2019 உலகக் கோப்பையின் போது, ​​எட்ஜ்பாஸ்டனில் நடந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதலின் போது இதேபோன்ற ஒரு விமானம் 'பலுசிஸ்தானுக்கு உலகம் குரல் கொடுக்க வேண்டும்' என்ற பேனருடன் காணப்பட்டது. அதே தொடரின் போது ஹெடிங்லியில் இலங்கைக்கு எதிரான இந்தியாவின் போட்டியின் போது ‘காஷ்மீருக்கு நீதி’ மற்றும் ‘இந்தியா ஸ்டாப் இனப்படுகொலை மற்றும் சுதந்திர காஷ்மீர்’ செய்திகளும் பேனர்கள் மற்றும் போஸ்டர்களில் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Pakistan Imran Khan T20 World Cup 2024 Special Story
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment