India vs Pakistan {IND vs PAK} T20 World Cup 2022 Live Streaming | இந்தியா vs பாகிஸ்தான் {IND vs PAK} டி20 உலகக்கோப்பை 2022 நேரடிஒளிபரப்பு: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்றது. இந்த தகுதி சுற்றின் முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
சூப்பர் 12 சுற்றில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் உள்ளன. இவற்றுடன் இந்த 4 அணிகளும் சேர்க்கப்பட்டு, இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.

இந்தியா – பாகிஸ்தான் மோதல்
இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் லீக் போட்டியில் இன்று ஞாயிற்று கிழமை (அக்டோபர் 23 ஆம் தேதி) பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. பிற்பகல் 1:30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கும் இந்த ஆட்டத்திற்காக இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான்போட்டி எங்கு நடக்கிறது?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் டாஸ் எத்தனை மணிக்கு?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான டாஸ் இந்திய நேரப்படி பிற்பகல் 1.00 மணிக்கு போடப்படும்.
டி20 உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டி எத்தனை மணிக்கு தொடங்குகிறது?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது
டி20 உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டியை எந்த சேனலில் ஒளிபரப்பு செய்யப்படும்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியானது ஸ்டார் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும். மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
எம்சிஜி மைதானம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது?
கடந்த 1853 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் (எம்சிஜி) தெற்கு அரைக்கோளத்தில் உள்ள மிகப்பெரிய மைதானமாகும். மேலும், இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 100,000 க்கும் அதிகமான மக்கள் அமரும் திறன் கொண்ட உலகின் 10வது பெரிய மைதானமாகும்.
லார்ட்ஸ் மைதானத்திற்கு அடுத்து, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஒன்றுக்கு மேற்பட்ட முறை (1992 மற்றும் 2015) நடத்திய 2வது மைதானம் இதுவாகும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக சந்தித்து?
இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2022 துபாயில் நடந்த ஆசிய கோப்பையில் சந்தித்தன. அங்கு இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil