இந்தியா vs தென்.ஆ., முதல் ODI அப்டேட் – ஆரம்பமே கவலை தரும் தகவல் தான்!

South Africa vs India 1st ODI When and Where to watch, Dharamsala : இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி

IND vs SA 1st ODI Squad, Venues, Players List, Weather Prediction, Pitch Report: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (மார்ச்.12) நடைபெறுகிறது. இப்போட்டி பற்றிய லைட் அப்டேட்ஸ் இங்கே,

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், தென்.ஆ., அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது கோலி தலைமையிலான டீம். இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்,

பராகுவே சிறையில் கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டினோ – அதிர்ச்சி சிறையில் ரசிகர்கள்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, லோகேஷ் ராகுல், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஷுப்மன் கில் ஆகியோர் பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (c & wk), டெம்பா பவுமா, ரேசி வான் டெர் டூசன், ஃபாப்டு பிளசிஸ், கைல் வெர்ரைன், ஹெய்ன்ரிச் க்ளாசீன், டேவிட் மில்லர், ஜான்-ஜான் ஸ்மட்ஸ், ஆண்டிலே பெலுக்வாயோ, லுங்கி ங்கிடி, லுதோ சிபம்லா, பியூரன் ஹென்ரிக்ஸ், அன்ரிச் நோர்ட்ஜே, ஜியார்ஜ் லிண்டே, கேஷவ் மஹாராஜ்.

போட்டி விவரம்:

தரம்சாலாவில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 1 மணிக்கு டாஸ் போடப்படும்.

வானிலை விவரம்:

இங்கு தான் ரசிகர்களுக்கு ஒரு ‘so sad’ மொமன்ட் உள்ளது. நாளை (மார்ச்.12) போட்டி நாளன்று, இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாம். ஏதாவது அதிசயம் நிகழ்ந்து போட்டி நடந்தால் தான் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை தோல்வி – WV ராமனின் பணியை குறைத்து மதிப்பிட முடியாது

பிட்ச் ரிப்போர்ட்:

தரம்சாலா பிட்ச், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் ‘தோஸ்து படா தோஸ்து’. எக்ஸ்ட்ரா பவுன்ஸ்-லாம் கேஷுவலா டெலிவரி ஆகிட்டு இருக்கும். இதனால், ‘டாஸ் வென்றால் சேஸ்’ தான் பெஸ்ட் ஆப்ஷன். இருந்தாலும், நாளைய வானிலையைப் பொருத்து, சில முடிவுகள் மாறுபடலாம்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான இத்தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும். இதன் நேரடி ஸ்ட்ரீமிங் ஹாட்ஸ்டாரில் கிடைக்கும், மேலும் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் காணலாம்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ind vs sa 1st odi squad venues players list weather prediction when and where to watch

Next Story
பராகுவே சிறையில் கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டினோ – அதிர்ச்சி சிறையில் ரசிகர்கள்.ronaldinho, ronaldinho jail, ronaldinho jail paraguay photo, ronaldinho brazil, ronaldinho fake passport, ronaldinho age, ronaldinho number, football news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com