Advertisment

இந்தியா 507 ரன்கள் குவித்து டிக்ளேர்: தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்

Ind vs SA 1st Test Day 2 Live Score Updates - இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் 2வது நாள் லைவ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs SA 1st Test Day 2 Cricket Live Scorecard: இரட்டை சதம் விளாசிய மாயங்க் அகர்வால்!

IND vs SA 1st Test Day 2 Cricket Live Scorecard: இரட்டை சதம் விளாசிய மாயங்க் அகர்வால்!

India vs South Africa 1st test day 2 score: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் (அக்.2)  நேற்று தொடங்கியது.

Advertisment

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் நாளில் 59.1 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி, 202 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கத்தில் மிக பொறுமையான இன்னிங்ஸ் தொடங்கிய ரோஹித், பிறகு தனது ரிதத்தை கண்டுபிடித்து நேர்த்தியாக விளையாட ஆரம்பித்தார். அரைசதம் கடந்த ரோஹித், ஓப்பனராக தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

publive-image

அதேசமயம், மாயங்க் அகர்வாலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஸ்கோர் 202/0 என்று இருந்த போது, மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

ரோஹித் 115 ரன்களுடனும், மாயங்க் 84 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய  இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 507 ரன்கள் குவித்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.  சிறப்பாக விளையாடி இந்திய அணியின் மயங்க் அகர்வால் 21 ரன்கள் குவித்து தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். ரோஹித் சர்மா 176 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 20 ஓவர்களை சந்தித்து 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்தது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.

இந்தியா: விராட் கோலி (c), ரஹானே(wc) , ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, முகமது ஷமி.

தென் ஆப்பிரிக்கா: மார்க்ரம், டீன் எல்கர், டி புருய்ன், பவுமா, டு பிளசிஸ்(c), டி காக்(w), பிலாண்டர், ரபாடா, செனூரன் முத்துசுவாமி, கேசவ் மஹராஜ், டேன் பியட், காகிசோ ரபாடா

Ind Vs Sa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment