விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 7 விக்கெட்டுகளுக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.ரோஹித் ஷர்மா 176 ரன்களும் , மாயங்க் அகர்வால் இரட்டை சதமும் விளாசினார்
இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 431 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி சேஸிங்கில் சிறிது தள்ளாடிய போது டீன் எல்கர் 160 ரன்களும், டி காக் 111 ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 323-4 என்ற ரன்கள் எடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதில், ரோஹித் சர்மா 149 பந்துகளில் 127 ரன்கள் குவித்தார்.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தன.
இந்திய அணியின் பந்துவீச்சில், ஷமி 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர் .
போட்டிக்குப் பின் பேசிய ஷமி ஸ், " விக்கெட்டு மிகவும் மெதுவாக மாறியது, பந்து வீசுவதும் கடினமாக மாரியதால், ஸ்டம்பிற்க்கு மட்டுமே குறி வைத்தோம், மறுமுனையில் ஜடேஜாவின் கொடுத்த ஒத்துழைப்பால் சிறப்பாக பந்து வீச முடிந்தது" என்று தெரிவித்துள்ளார்.