India vs South Africa 1st Test Highlights: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (அக்.2) தொடங்கியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி, இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டித் தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. 2015ல் தென்னாப்பிரிக்காவிடம் கோப்பையை இழந்த இந்திய அணி, இம்முறை கோப்பையை சமன் செய்தது.
"We wanted to let Saha ease back into the side" - @imVkohli #TeamIndia #INDvSA @Paytm pic.twitter.com/FyOnvpe7QW
— BCCI (@BCCI) October 1, 2019
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
இதற்கான இந்திய பிளேயிங் XI நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியில், விராட் கோலி (கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்) , ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா: மார்க்ரம், டீன் எல்கர், டி புருய்ன், பவுமா, டு பிளசிஸ்(c), டி காக்(w), பிலாண்டர், ரபாடா, செனூரன் முத்துசுவாமி, கேசவ் மஹராஜ், டேன் பியட், காகிசோ ரபாடா
மேலும் படிக்க - தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் ஒரு இளம் தமிழன் - சவாலை சந்திக்க காத்திருக்கும் இந்தியா
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கத்தில் மிக பொறுமையான இன்னிங்ஸ் தொடங்கிய ரோஹித், பிறகு தனது ரிதத்தை கண்டுபிடித்து நேர்த்தியாக விளையாட ஆரம்பித்தார். அரைசதம் கடந்த ரோஹித், ஓப்பனராக தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
அதேசமயம், மாயங்க் அகர்வாலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஸ்கோர் 202/0 என்று இருந்த போது, மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
ரோஹித் 115 ரன்களுடனும், மாயங்க் 84 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.