IND vs SA 2nd ODI LIVE updates in tamil: தென்ஆப்பிரிக்கா மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், கடந்த புதன்கிழமை பார்ல் நகரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே பார்ல் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இந்தியா நெருக்கடியான சூழலில் களம் காண்கிறது.
இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்:
தென் ஆப்பிரிக்கா</strong>
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஜன்னெமன் மாலன், டெம்பா பவுமா (கேப்டன்), ஐடன் மார்க்ரம், ராஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மஹாராஜ், லுங்கி என்கிடி, சிசண்டா மகலா, தப்ரைஸ் ஷம்சி
இந்தியா
கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்
இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் (29), கோலி (0) ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் மறுமுனையில் அவருடன் களமிறங்கிய கேப்டன் ராகுல், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். ராகுல் 55 (79) ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், வான்டெர் துஸ்சென்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த விராட் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து வந்த விக்கெட் கீப்பர் வீரர் ரிஷாப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்த ஆட்டத்திலும் சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கையில், தப்ரைஸ் ஷம்சியின் சிக்கி வெளியேறினார். பண்ட் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 85 (71 பந்துகள்) ரன்கள் சேர்த்திருந்தார்.
தொடர்ந்து வந்த வீரர்களில், ஷ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னிலும், வெங்கடேச ஐயர் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷர்துல் தாக்கூர் 40 ரன்களுடனும், அஸ்வின் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்தது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில், தப்ரைஸ் ஷம்சி 2 விக்கெட்டுகளையும், ஐடன் மார்க்ரம், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மஹாராஜ், சிசண்டா மகலா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய குயிண்டன் டீகாக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த மற்றொரு தொடக்க ஆட்டகாரர் மலன் நிதான ஆடி ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடியை பிரிக்க இந்திய அணி மேற்கொண்ட முயற்கிக்கு 22 வது ஓவரில் பலன் கடைத்தது.
அதிரடியாக ஆடி அரைசதம் கடந்து சதத்தை நோக்கிய பயணித்துக்கொண்டிருந்த டிகாக் தாகூர் பந்துவீச்சில எல்பிடபில்யூ முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் பவுமா அதிரடியாக ஆட மறுமனையில் சதத்தை நெருங்கிய மலன் 10 பந்துகளில் 91 ரன்கள் குறித்து ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் பவுமா 36 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
இதனையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வான்டர் டூசன், எய்டன் மார்க்ரம ஜோடி பதற்றமின்றி ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. இறுதியில், 48.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்த தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க அணி தற்போது ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் கேப்டவுனில் நடைபெறுகிறது.
India in South Africa, 3 ODI Series, 2021/22Boland Park, Paarl 02 February 2023
South Africa 288/3 (48.1)
India 287/6 (50.0)
Match Ended ( Day – 2nd ODI ) South Africa beat India by 7 wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“