இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி 20 போட்டி நேற்று (செப்டம்பர் 18) மொகாலியில் நடந்தது.
முதலில் டாஸ் வென்று விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அதிகப்பட்சமாக டி பவுமா 49 ரன்கள் குவித்து தீபக் சாஹர் பந்தில் வெளியேறினார். இந்திய அணியின் பௌலிங் சார்பில் தீபக் சாஹர் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். சைனி, ஜடேஜா, ஹர்திக் பாண்டிய தலா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் நிதானமாக ஆடினார்கள். இருப்பினும், தென் ஆப்பிரிக்கா வின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரோஹித் சர்மா பன்னிரண்டு ரன்களில் ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் தவான், விராட் கோலி அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர். தவான் 40 ரன்களில் ஆட்டம் இழந்தார். விராத் கோலி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 72 ரன்களை சேர்த்தார். ரிஷப் பாண்ட் நேற்றைய ஆட்டத்தில் பெரிதாய் சோபிக்கவில்லை. தனது கணக்கில் வெறும் நான்கு ரன்களை மட்டும் எடுத்து வெளியேறினார்.
எனவே, அணியின் நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தால் இன்னும் ஆறு பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகிக்கின்றது.
அடுத்த டி20 போட்டி வரும் செப்டம்பர் 22 ம் தேதி பெங்களூரில் நடைபெற விருக்கிறது.
இந்த டி 20 தொடரில் வீரர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே அடுத்த டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இருக்கும். எனவே வீரர்களுக்கு இது முக்கியமான தொடர்.