/tamil-ie/media/media_files/uploads/2018/01/Jasprit_Bumrah.jpeg)
Jasprit_Bumrah
தென் ஆப்பிரிக்காவில் உள்ள செஞ்சூரியன் நகரில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நடந்து வருகிறது.
முதலில் பேட்டிங்க் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்க்ஸில் 335 ரன்களை எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 307 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்காவை விட 28 ரன்கள் குறைவானது. மூன்றாவது நாளான நேற்று தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் 1 ரன்னிலும், அடுத்து வந்த அம்லா 1 ரன்னிலும் வெளியேறினர். இருவரது விக்கெட்டுகளையும் பும்ரா வீழ்த்தினார். இதையடுத்து ஏபிடி வில்லியர்ஸ் அரை சதத்துடனும், எல்கர் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஆட்ட நேர இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்காவை குறைவான ரன்களில் அவுட்டாக்க வேண்டும். இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், அதிக ரன்களை விட்டுக் கொடுத்தால், இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இன்றைய ஆட்டத்தின் லைவ் அப்டேட்டை ஐஇதமிழ் டாட் காம் இணைய தளத்தில் காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us