இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அக்.10ம் தேதி தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில், கோலியின் இரட்டை சதத்தால்(254) இந்திய அணி 601-5 என்று டிக்ளேர் செய்தது. மாயங்க் அகர்வால் சதம்(108) விளாசினார். ஜடேஜா அதிரடியாக ஆடி 91 ரன்கள் எடுத்தார்.
IND vs SA 2nd Test Day 3 Highlights
இந்தியா பிளேயிங் XI: ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, அஜின்க்ய ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகராஜ், முத்துசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது.
டீன் எல்கரை 6 ரன்னிலும், மார்க்ரமை 0 ரன்னிலும் உமேஷ் யாதவ் வெளியேற்ற, பவுமா 8 ரன்களில் ஷமி ஓவரில் அவுட்டானார்.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் அடுத்தடுத்து தென்.ஆ., விக்கெட்டுகளை இழந்து வருகிறது.
கேப்டன் டு பிளசிஸ் 64 ரன்களும், டி காக் 31 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால், மிக மோசமான ரன்களை நோக்கி ஆடிக் கொண்டிருந்த தென்.ஆ., அணியில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலாந்தர், மஹாராஜ் மிகச் சிறப்பாக விளையாடினர். மஹாராஜ் 132 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிலாந்தார் 44 ரன்களுடன் இறுதி வரை களத்தில் நின்றார். இறுதியில், 275 ரன்களுக்கு தென்.ஆ., ஆல் அவுட்டானது.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட அந்த அணி 326 ரன்கள் பின்தங்கியுள்ளது.