IND vs SA 3rd ODI Match 2022 Score | IND vs SA 3வது ஒருநாள் சர்வதேச போட்டி 2022 : இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு; தென் ஆப்ரிக்கா முதலில் பேட்டிங்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெல்லி மைதானத்தில் மழை காரணமாக அதிக அளவில் ஈரப்பதம் காணப்பட்டது. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், போட்டிக்கான டாஸ் போடுவதிலும் தாமதம் ஏற்பட்டது. டாஸ் பிற்பகல் 1:45 மணிக்கு போடப்பட்ட நிலையில், ஆட்டம் சரியாக 2:15 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யும்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் பட்டியல்:-
தென் ஆப்பிரிக்கா:
குயின்டன் டி காக்( விக்கெட் கீப்பர்), ஜன்னெமன் மலான், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர்(கேப்டன்), மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே
இந்தியா:
ஷிகர் தவான்(கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான்
Hello from Delhi 👋
All set for the #INDvSA ODI series decider 👌#TeamIndia pic.twitter.com/EVWbmnBoR4— BCCI (@BCCI) October 11, 2022
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் 9 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்தியா, ராஞ்சியில் நேற்று முன்தினம் நடந்த 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 279 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி, அதை 45.5 ஓவர்களிலே எட்டிப்பிடித்து அசத்தியது. இந்திய அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 113 ரன்களும், இஷான் கிஷன் 93 ரன்களும் குவித்து ரன்மழை பொழிந்து இருந்தனர். இதனால், அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் களமாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஜோடிக்கு சரியான தொடக்க கிடைக்கவில்லை. இருவருமே சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் கொடுத்துள்ளனர். குறிப்பாக, கேப்டன் தவான் இரண்டு ஆட்டங்களிலும் சேர்த்து மொத்தமாகவே 17 ரன்கள் தான் எடுத்துள்ளார். எனவே, இந்த இரு வீரர்களில் ஒருவர் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.
மிடில்-ஆடரில் துணை கேப்டன் சஞ்சு சாம்சன் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சுழற்பந்து வீச்சாளர்களில் ஷாபாஸ் அகமது மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல், வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ் கலக்கி வருகிறார்.
இந்தியாவிடம் டி-20 கிரிக்கெட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த தென்ஆப்பிரிக்க அணி, அதற்கு பதிலடியாக ஒரு நாள் போட்டி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. உடல்நலக்குறைவால் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு எடுத்த கேப்டன் பவுமா, இன்றைய ஆட்டத்தில் களமாடுவார் என்று தெரிகிறது. பேட்டிங் வரிசையில் உள்ள குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் போன்றோர் ஒருசேர அதிரடி காட்டினால், அந்த அணி இமாலய எட்டிவிடும். பந்துவீச்சிலும் பலம் பொருந்திய அணியாகவே தென்ஆப்பிரிக்கா உள்ளது.
அத்துடன் இது 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலக போட்டிக்கான தகுதி சுற்றாக அமைந்திருப்பதால் இந்த வெற்றி தென்ஆப்பிரிக்காவுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அதை மனதில் கொண்டுள்ள அந்த அணியினர் போட்டியை வென்று தொடரை வசப்படுத்த நினைப்பார்கள். அதேவேளையில் சொந்த மண்ணில் நடக்கும் தொடரை கைப்பற்றவே இந்திய அணி தீவிரம். இதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான், ராகுல் திரிபாதி, ரஜத் படிதார், முகேஷ் குமார் , ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய்
தென்ஆப்பிரிக்கா அணி:
குயின்டன் டி காக், ஜான்மேன் மாலன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ் (கேப்டன்), ஜார்ன் ஃபோர்டுயின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, டெம்பா பவுல்வே, ஆண்டிலே, ஆண்டிலே, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி, மார்கோ ஜான்சன்
இரு அணி உத்தேச வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது அல்லது முகேஷ்குமார், முகமது சிராஜ், அவேஷ்கான், குல்தீப் யாதவ்.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ் அல்லது ஜேன்மன் மலான், பவுமா (கேப்டன்), மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேஷவ் மகராஜ், அன்ரிச் நோர்டியா, இங்கிடி, ககிசோ ரபடா.
டெல்லி ஆடுகளம் எப்படி?
டெல்லி ஆடுகளம் பேட்டிங்குக்கு ஓரளவு நன்றாக இருக்கும். சுழற்பந்து வீச்சு எடுபடவும் வாய்ப்புண்டு. இரவில் பனிப் பொலிவு தாக்கம் இருக்கும் என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும்.
தவிர, டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மழை பெய்வதற்கு 40 சதவீதம் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை 20 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 12-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. தென்ஆப்பிரிக்கா இங்கு ஆடியுள்ள ஒரே ஒரு ஆட்டத்திலும் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக மாலன் மற்றும் குவிண்டன் டி காக் களமிறங்கினர். வாசிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 3வது ஓவரிலேயே குவிண்டன் டி காக் 6 ரன்களில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை இவரைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க வீரர்கள் மாலன் 15 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 3 ரன்னிலும், மார்க்ரம் 9 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய க்ளாஸென் நிலைத்து நின்று விளையாடினார். ஆனல், எதிர்முனையில், தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் விக்கெட்களை இழந்து கொண்டே இருந்தனர். குல்தீப் யாதவ் சுழற்பந்தை எதிர்கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இமாட், நோர்ட்ஜெ ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியனுக்கு திரும்பினார்கள்.
தென் ஆப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக க்ளாஸென் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், சுந்தர், சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
சரியாக 100 ரன் எடுதால் வெற்றி என்ற மிகவும் எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷிக்கர் தவான், ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக பேட்டிங் செய்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிக்கர் தவான் 14 பந்துகளில் 8 ரன் எடுத்திருந்தபோது மார்கோ ஜான்சென்னால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். இவரை அடுத்து வந்த இஷான் கிஷான் 10 பந்துகளில் 10 ரன் எடுத்து இமாத் ஃபோர்டுன் பந்தில் குவிண்டன் டிகாக் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர், ஷுப்மன் கில் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். நன்றாக விளையாடிய ஷுப்மன் கில் 57 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தபோது அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லுங்கி இங்கிடி பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆனார்.
ஆனாலும், அடுத்து வந்த சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். 19.1 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் ஏற்கெனவே இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 2-1 வெற்றி என்றக் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.