IND vs SA 3rd T20 Live Score, India vs South Africa Live Scorecard 3rd T20: தென்ஆப்பிரிக்க அணி மற்றும் இந்திய அணிக்கு இடையே இந்தூரில் நடைபெற்று வரும் 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 227 ரன்கள் எடுத்தது. 228 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதல், இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்து ஏற்கனவே தொடரை இழந்து விட்டது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. முதல், இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால், தென் ஆப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றியைப் பெறுவதில் முனைப்பாக இருந்தது. அதே நேரத்தில் இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் களம் இறங்கியது.
இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கி விளையாடியது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் கோலி, ராகுல், அர்ஷ்தீப் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர், உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் விளையாடுகின்றனர்.
தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளைப் அதிரடியாக அடித்து விளையாடினார்கள். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ரிலீ ரொஸ்ஸோவ் 48 பந்துகளில் 100 ரன்களை எடுத்து சதத்தை பதிவு செய்தார். குவிண்டன் டி காக் 68 ரன்கள் எடுத்தார். அஸ்வின், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். குவிண்டன் டி காக் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதன் மூலம், 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் ரிஷப் பண்ட்டும் களம் இறங்கினர். ரோஹித் சர்மா முதல் ஓவரில் ரபாடாவின் பந்துவீச்சில் 3வது பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். இவரிஅ அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 1 ரன் மட்டுமே எடுத்து வேய்ன் பர்னெல் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆனார். ரிஷன்ப் பண்ட் மற்று தினேஷ் கார்த்திக் இருவரும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சி செய்தனர்.
14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பண்ட், லுங்கி இங்கிடி பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுமுனையில், அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 46 ரன் எடுத்திருந்தபோது, கேஷவ் மஹராஜ் பந்தில் போல்ட் அவுட் ஆனார். இவர்களை அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், ரவிச்சந்திரன் ஆகியோர் ஒற்றை இலக்க ரன் எடுத்து வெளியேறினார்கள். தீபக் சாஹர் 31, உமேஷ் யாதவ் 20 ரன் எடுத்து அவுட் ஆனார்கள். 18.3வது ஓவரில் இந்திய அணி 178 ரன்கள் எடுத்திருந்தபோது, சிராஜ் 5 ரன் எடுத்து அவுட் ஆனார். இதன் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி தொடரில் ஆறுதல் வெற்றி பெற்றது. 3 போட்டிகளில் ஏற்கெனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“