India vs South Africa 3rd T20I: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது 5 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதனால், அந்த அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாகும். ஏனெனில் இதில் தோற்றால் இந்திய அணி தொடரை இழந்து விடும்.
இந்திய அணி 12 டி-20 ஆட்டங்களில் தொடர் வெற்றியை பதிவு செய்திருந்த நிலையில், தற்போது நடந்து வரும் தொடரில் தொடர்ந்து 2 தோல்வியை சந்தித்துள்ளது. கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக செயல்பட்டு வலுவான ரன்களை குவித்தது. ஆனால், பந்துவீச்சில் சொதப்பியது. கட்டாக்கில் நடந்த ஆட்டத்தில் அப்படியே உல்ட்டாவாக நடந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தி இருந்தார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளுக்கு இடையில் ஒருநாள் மட்டுமே ஒய்வு கிடைத்தது. இதனால், இந்த குறுகிய காலத்தில் அணிக்கு ஏற்றவாறு திட்டங்களை மறுசீரமைப்பது இந்திய அணிக்கு அவசியமாகும். மேலும் அணியின் குறைபாடுகளை களைந்தெறிந்து அதிரடியாக விளையாட தீவிரம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
தென்ஆப்பிரிக்கா, தொடரில் முற்றிலும் மாறுபட்ட தொடக்கத்தை பெற்றுள்ள நிலையில், அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறது. பேட்டிங்கில் வான்டெர் டஸன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், பவுமாவும், பந்து வீச்சில் ரபடா, நோர்டியா, வெய்ன் பார்னெலும் நல்ல நிலையில் உள்ளனர். கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத குயின்டான் டி காக் களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை முதல் 2 ஆட்டங்களில் கண்ட வெற்றி உற்சாகத்துடன் களம் காணும். மேலும், இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். அதேவேளையில் இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பதால், வெற்றி கணக்கை தொடங்க எல்லாவகையிலும் தங்களது பலத்தை வெளிப்படுத்துவார்கள். எனவே, இவிவிரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி
ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
தென்ஆப்பிரிக்கா அணி
டெம்பா பவுமா (கேப்டன்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ், தப்ரைஸ் ஷம்சி, அன்ரிச் நார்ட்ஜே, டிரிஸ்டன் ஸ்டுப்கிடி , மார்கோ ஜான்சன், குயின்டன் டி காக், ஐடன் மார்க்ராம்
இரு அணி உத்தே வீரர்கள் பட்டியல்:
இந்தியா:
இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான் அல்லது அர்ஷ்தீப் சிங்
தென்ஆப்பிரிக்கா:
டெம்பா பவுமா (கேப்டன்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.