Ind vs sa Test 3, Day 3 score card:
இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்களை எடுத்தது. இதில் ரோகித் சர்மா 212 ரன்களும் ரஹானே 115 ரன்களும் குவித்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. இதையடுத்து 2வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி இன்று மூன்றாவது ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களை சந்தித்து 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இந்திய அணியில் சமி 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணி மோசமாக விளையாடிவருவதால் கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் (212) மற்றும், ரஹானேவின் சதத்தால் (115) 497-9 என்று டிக்ளேர் செய்தது.
ஜடேஜாவின் 51ம் நோட்டபிள் ரன்கள்.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்.ஆ., அணியில் டீன் எல்கர் 0 ரன்களில், ஷமியின் பவுன்ஸ் பந்தில் 'தொடலாமா வேண்டாமா' மோடில் கேட்ச்சாக, டி காக் 4 ரன்களில் உமேஷின் அட்டகாசமான பவுன்சில் அவுட்டானார்.
இந்திய பவுலர்களின் விக்கெட்டுகள் பவுன்ஸ், பவுன்ஸ் என்று வருவது என்பதெல்லாம் வேற லெவல்...
நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், அந்த அணி 9/2 என்று எடுத்திருந்தது.
இன்று, இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய பவுலர்கள், தென்.ஆ., பேட்ஸ்மேன்களை பாடுபடுத்திவிட்டனர். முதல் எட்டு விக்கெட்டுகளில் மூவர் மட்டுமே டபுள் டிஜிட் ரன்கள் எடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிகபட்சமாக ஹம்சா 62 ரன்களும், பவுமா 32 ரன்களும் எடுக்க, ஷமி, யாதவ் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஷாபஸ் நதீம், பவுமா விக்கெட்டை வீழ்த்தினார்.
தொடர்ந்து, அந்த அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா ஃபாலோ ஆன் கொடுத்தது. இதையடுத்து, இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 26 ரன்களுக்கு 4 நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.