இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நாளை (அக்.19) தொடங்க உள்ளது.
Advertisment
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, முதலில் டி20 தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி மழை காரணமாக தடைபட்டது. 3வது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரில், விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற, புனேவில் நடந்த 2வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மீண்டும் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
இதன்மூலம் இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ந்து அதிக டெஸ்ட் தொடரை (11) வென்ற அணி என்ற உலக சாதனை படைத்தது. இதற்கு முன், ஆஸ்திரேலியா 10 தொடரை வென்றதே அதிகமாக இருந்தது.
இந்த வெற்றி, கேப்டன் கோலியின் 30வது டெஸ்ட் வெற்றி ஆகும். அதிக வெற்றி பெற்ற கேப்டன்கள் பட்டியலில், 37 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் முதலிடத்திலும், மற்றொரு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 35 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், நாளை இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய பிளேயிங் XI வாய்ப்பு: மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரிதிமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, ஆர் அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் குல்தீப் யாதவ் / ஹனுமா விஹாரி.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச் டி சேனலில் போட்டியை நேரடியாக காணலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டாரில் போட்டியைக் காணலாம். தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.