New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/a66.jpg)
Ind vs SA first test match india playing xi announced - நோ ரிஷப் பண்ட்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - இந்திய அணி அறிவிப்பு
Ind vs SA first test match india playing xi announced - நோ ரிஷப் பண்ட்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - இந்திய அணி அறிவிப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி, இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டித் தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. 2015ல் தென்னாப்பிரிக்காவிடம் கோப்பையை இழந்த இந்திய அணி, இம்முறை கோப்பையை சமன் செய்தது.
இதையடுத்து, தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (அக்.2) தொடங்குகிறது.
இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1, 2019#TeamIndia for 1st Test of @Paytm Freedom Series for Gandhi-Mandela Trophy against South Africa.
Virat Kohli (Capt), Ajinkya Rahane (vc), Rohit Sharma, Mayank Agarwal, Cheteshwar Pujara, Hanuma Vihari, R Ashwin, R Jadeja, Wriddhiman Saha (wk), Ishant Sharma, Md Shami#INDvSA
— BCCI (@BCCI)
#TeamIndia for 1st Test of @Paytm Freedom Series for Gandhi-Mandela Trophy against South Africa.
— BCCI (@BCCI) October 1, 2019
Virat Kohli (Capt), Ajinkya Rahane (vc), Rohit Sharma, Mayank Agarwal, Cheteshwar Pujara, Hanuma Vihari, R Ashwin, R Jadeja, Wriddhiman Saha (wk), Ishant Sharma, Md Shami#INDvSA
இந்திய அணியில், விராட் கோலி (கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்) , ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
டி20 போட்டிகளில் சொதப்பிய ரிஷப் பண்ட் உட்கார வைக்கப்பட்டு, விக்கெட் கீப்பராக சீனியர் வீரரான ரிதிமான் சாஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ரோஹித் ஷர்மாவுக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.