13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (நவ.5) ஞாயிற்றுக்கிழமை இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித், சுப்மன் கில் பேட்டிங் செய்து வருகின்றனர்.
முதல் விக்கெட்
அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா 40 ரன்களில் வெளியேறினார். ரபாடா பந்து வீச்சில் கேச் அவுட்டாகி வெளியேறினார். 8 ஓவர் முடிவில் இந்தியா 72 ரன்கள் எடுத்துள்ளது.
கில் அவுட்
தொடக்க வீரர்களாக களமிறங்கி ரோகித், சுப்மன் கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 10-வது ஓவரில் கேசவ் மகராஜ் பந்தில் சுப்மன் கில் 23 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். 12 ஓவர் முடிவில் இந்தியா 96 ரன்கள் குவிப்பு.
கோலி, ஷ்ரேயாஸ் நிதான ஆட்டம்
விராத் கோலி, ஷ்ரேயாஸ் நிதானமாக ஆடி ரன் குவித்து வருகின்றனர். கேசவ் மகாராஜின் மற்றொரு அற்புதமான ஓவரில், அவர் தனது ஐந்தாவது ஓவரில் மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் 51 பந்துகளில் 28 ரன்கள் எடுத்துள்ளனர். இந்தியா 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.
கோலி அரைசதம்
விராத் கோலி 67 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தல். கோலி, ஷ்ரேயாஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிறப்பாக ஆடிவந்த ஸ்ரேயாஸூம் அரைசதம் அடித்து அசத்தினார். இந்திய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்ரேயாஸ் அவுட்
சிறப்பாக ஆடிவந்த ஸ்ரேயாஸ் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். அவர் எங்கிடி பந்தில் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்தார். இதனையடுத்து ராகுல் களமிறங்கினார். இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.
ராகுல் அவுட்
ஆரம்பம் முதலே ராகுல் ரன் சேர்க்க திணறினார். 17 பந்துகளைச் சந்தித்த 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் ஜென்சன் பந்தில் வான் டெர் டுசன் வசம் கேட்ச் கொடுத்தார். இதனையடுத்து சூர்யகுமார் களமிறங்கினார். இந்திய அணி 44 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது.
சூர்யகுமார் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். 5 பவுண்டரிகள் விளாசிய சூர்யகுமார் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் ஷாம்சி பந்தில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்ததாக ஜடேஜா களமிறங்கினார்.
கோலி சதம்
மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த கோலி சதம் அடித்து அசத்தினார். ஜடேஜாவும் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடினார். ஜடேஜா 15 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். இந்த நிலையில், இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது
இந்தியா 326/5
இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. கோலி 101 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். தென்னாப்பிரிக்கா தரப்பில் எங்கிடி, ஜென்சன், ரபாடா, ஷாம்சி, மகராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா பேட்டிங்:
327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குயிண்டன் டி காக், டெம்பா பவுமா களம் இறங்கினர்.
குயிண்டன் டி காக் போல்ட் அவுட்
இரண்டாவது ஓவரை வீசிய முஹம்மது சிராஜ் பந்தில் குயிண்டன் டி காக் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, ரஸ்ஸி வேன் டெர் துஸ்ஸன் பேட்டிங் செய்ய வந்தார்.
டெம்பா பவுமா போல்ட் அவுட்
தென் ஆப்பிரிக்க அணி 8.3 ஓவருக்கு 1 விக்கெட் இழப்புக்கு 22 ரன் எடுத்திருந்தபோது, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டெம்பா பவுமா 11 ரன் எடுத்திருந்த நிலையில், ரவிந்திர ஜடேஜா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து எய்டன் மர்க்ரம் பேட்டிங் செய்ய வந்தார்.
எய்டன் மர்க்ரம் அவுட்
தென் ஆப்பிரிக்க அணி 9.5 ஓவருக்கு 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்திருந்தபோது, 6 பந்துகளில் 9 ரன் அடித்திருந்த எய்டன் மர்க்ரம், ஷமி பந்தில் கே.எல். ராகுல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஹென்ரிச் க்ளாசென் பேட்டிங் செய்ய வந்தார்.
இந்தியா அபார வெற்றி
இந்திய வீரர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத தென் ஆப்பிரிக்க அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ரன் குவிக்க தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி, 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவிந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“