IND vs SA ODI Series 2020 Schedule, Squad, Venues, Time Table, Players List: நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரை, 2020 கிரிக்கெட் ரசிகர்களின் பரம்பரையே மறக்க வேண்டியிருக்கும் சூழலில், அடுத்த ஆபரேஷன் ரெடியாகிவிட்டது.
இந்தியா VS தென்னாப்பிரிக்கா….
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், தென்.ஆ., அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது கோலி தலைமையிலான டீம். இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பையில் தோல்வியைத் தாங்க முடியாமல் கதறி அழுத ஷஃபாலி வெர்மா
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, லோகேஷ் ராகுல், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஷுப்மன் கில் ஆகியோர் பெற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணி:
குயிண்டன் டி காக் (c & wk), டெம்பா பவுமா, ரேசி வான் டெர் டூசன், ஃபாப்டு பிளசிஸ், கைல் வெர்ரைன், ஹெய்ன்ரிச் க்ளாசீன், டேவிட் மில்லர், ஜான்-ஜான் ஸ்மட்ஸ், ஆண்டிலே பெலுக்வாயோ, லுங்கி ங்கிடி, லுதோ சிபம்லா, பியூரன் ஹென்ரிக்ஸ், அன்ரிச் நோர்ட்ஜே, ஜியார்ஜ் லிண்டே, கேஷவ் மஹாராஜ்.
பெயரை படிக்கும் போதே தல சுத்துதா…? மேட்சுல தல சுத்தமா இருந்தா சரி.
போட்டி விவரம்:
மார்ச் 12: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 1 வது ஒருநாள் (தரம்சாலா), பிற்பகல் 1.30
மார்ச் 15: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 2 வது ஒருநாள் (லக்னோ), பிற்பகல் 1.30
மார்ச் 18: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 3 வது ஒருநாள் (கொல்கத்தா), பிற்பகல் 1.30
பாண்ட்யா ரிட்டன்ஸ்:
காயம் காரணமாக சில மாதங்களாக ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, இத்தொடரின் மூலம் மீண்டும் அணிக்குள் திரும்பியிருப்பது தான், இத்தொடரின் மிக முக்கிய அம்சம். ஆம்! அவரது ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் + திமிர் ஆட்டிடியூடை இந்தியா முற்றிலும் இழந்திருந்தது. அவரது ஆக்ரோஷமும் மிஸ்ஸிங். ஜடேஜா ஓரளவுக்கு ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் கொடுத்தாலும், பாண்ட்யாவின் ‘முரட்டு அடி’யை ஈடு செய்ய முடியுமா?
பந்தையே சுழற்றாத வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு; மற்றவர்கள் புறக்கணிப்பா? – விளாசும் ஹர்பஜன்
லோ ஆர்டரில் புயல் வீசக் காணோமே என்று கோலி ஏக்கப்பட்ட நாட்கள் பல. அதனால், இந்தியா சரிந்த போட்டிகளும் பல. இவற்றுக்கு 75% முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பாண்ட்யா ரிட்டர்ன் அமையுமா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
பும்ரா மேஜிக் எடுபடுமா?
நியூசிலாந்து தொடரில், ரசிகர்கள் மட்டுமல்ல, இந்திய நிர்வாகமும் சற்றே கவலை கொண்ட விஷயம், பும்ரா எங்கே? என்பது. நியூஸி.,க்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் சுத்தமாக பும்ராவின் மேஜிக் எடுபடவில்லை. டெஸ்ட்டில் ஒரளவுக்கு அவர் காம்ப்ரமைஸ் செய்தாலும், காயத்துக்கு பிறகு களம் கண்ட தொடரில், அவரது பெர்ஃபாமன்ஸ் நிறைவைத் தரவில்லை.
ஸோ, பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் எப்படி செயல்பட போகிறார் என்பது எதிர்பார்ப்பின் முக்கிய அங்கமாக உள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும். இதன் நேரடி ஸ்ட்ரீமிங் ஹாட்ஸ்டாரில் கிடைக்கும், மேலும் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் காணலாம்.