ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (08/03/2020) நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 100 ரன்கள் கூட எடுக்காமல் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது இந்திய அணி. இந்திய அணியின் தோல்வியை தாங்க முடியா இளம் வீராங்கணை ஷஃபாலி வெர்மா கதறி அழுதார். அவரை சக வீராங்கணைகள் தேற்றி ஆறுதல் கூறினர்.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வெர்மா பெரிய அளவில் ரன்கள் அடிக்கத் தவறினார். மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அடித்த 185 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஷஃபாலி வெர்மா வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலிஸா ஹீலியின் கேட்சை ஆட்டத்தின் தொடக்கத்தில் தவறவிட்ட ஷஃபாலி வெர்மா போட்டி முடிந்ததும் கண்ணீருடன் காணப்பட்டார். ஆஸ்திரேலிய அணியின் ஹீலி 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்பட 75 ரன்கள் எடுத்தார்.
இந்த மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருந்த 16 வயதே ஆன ஷஃபாலி வெர்மா இந்திய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் போட்டிக்கு பின் இந்திய அணியின் தோல்வியின் சோகம் தாங்க முடியாமல் ஷஃபாலி வெர்மா மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அவரை சகவீராங்கனைகள் தேற்றி ஆறுதல் கூறினர்.
இந்த தொடரில், சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வெர்மா ஐந்து போட்டிகளில்163 ரன்களைக் குவித்து 32.3 சராசரி ரன் ரேட்டைப் பெற்றார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 158.25 ஆக இருந்தது. டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் அவர் மொத்தம் ஒன்பது சிக்ஸர்களை அடித்தார். இவர் இறுதி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் ஹீலி அடித்த சிக்ஸர்களுக்கு சமமானது.
இறுதிப் போட்டியில் முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஹீலி - பெத் மூனி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து துவம்சம் செய்தனர்
இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த இன்னிங்ஸ் முழுவதும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. அதோடு, இந்திய அணி ஐந்து பந்துகள் மீதம் இருந்த நிலையில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் இந்திய அணி மோசமாக தோல்வியடைந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"