Advertisment

தெ.ஆ ஒருநாள் தொடர்: கே.எல். ராகுல் அணியில் யார் யாருக்கு இடம்?

IND vs SA ODI: India's Predicted Playing XI For The 1st ODI Tamil News: அக்டோபர் 2016-க்குப் பிறகு, விராட் கோலி முதல் முறையாக ​​கேப்டனாக அல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாக விளையாட உள்ளார்.

author-image
WebDesk
New Update
IND vs SA ODI Tamil News: KL Rahul’s odi squad against South Africa

IND vs SA ODI Tamil News: தென்ஆப்பிரிக்கா மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், டெஸ்டில் 1-2 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியை தழுவியது.

Advertisment

இந்நிலையில், இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை 19ம் தேதி முதல் தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனேவே டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் பதிலடி கொடுக்க காத்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், களமிறங்கும் லெவனை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதற்காக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த தொடருக்கான கேப்டன் கே.எல்.ராகுல் பல கட்ட ஆலோசனையை மேற்கொண்டுள்ளனர்.

மீண்டும் களமிறங்குவார தவான்?

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். எனவே, கே.எல்.ராகுலுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஷிகர் தவான் களமிறக்கப்படலாம்.

தொடக்க ஆட்டக்காரராக பேட்டிங் செய்த அதிக அனுபவத்தை கொண்டுள்ள தவான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு ஆட்டத்தில் 96 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். தொடர்ந்து ஜூலை மாதத்தில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரின் போது அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

எனினும், சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே தொடரில் தவான் பெரிதும் சோபிக்கவில்லை. 5 ஆட்டங்களில் ஆடியிருந்த அவர் 56 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், இதே தொடரில் களமாடிய மகாராஷ்டிராவின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஐந்து போட்டிகளில் நான்கு சதங்கள் உட்பட 603 ரன்களை குவித்திருந்தார். மேலும் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராகவும் இருந்தார். எனவே, இந்த வீரர்களில் யாருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பேட்ஸ்மேனாக கோலி

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் நாளை களமிறங்க உள்ள விராட் கோலி, அக்டோபர் 2016-க்குப் பிறகு முதல் முறையாக ​​கேப்டனாக அல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாக விளையாடுவார். தன்னை கேப்டன் பொறுப்புகளில் இருந்து விடுவித்துக் கொண்ட அவர், இப்போது தனது பேட்டிங்கில் முழு கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது வேகமாக ரன் சேர்க்கும் திறன் குறைந்து இருந்தாலும், அவர் மீண்டும் தனது ஃபார்மிற்கு திரும்புவார். ஏனென்றால், கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலியின் சராசரி 46.66 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 90.90 ஆகவும் உள்ளது. மேலும் அவர் 560 ரன்கள் எடுத்துள்ளார்.

ராகுல் எந்த இடத்தில் களமாடுவர்?

கடந்த இரண்டு ஆண்டுகளில், ராகுல் பெரும்பாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரிலே பேட் செய்திருக்கிறார். முன்னர் குறிப்பிட்டது போல ரோகித் சர்மா தொடரில் இருந்து விலகியுள்ளதால் அவர் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. எனினும், இதுவரை மிடில் ஆர்டரில் பேட் செய்த அவரது சராசரி 69.25 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 109.92 ஆகவும் உள்ளது. மேலும் அவர் 554 ரன்களை சேர்த்துள்ளர்.

அப்படியே ராகுல் தொடக்க வீரராக களமிறங்கும் பட்சத்தில், மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் விளையாடுவார்கள். இருப்பினும், அணியின் வெற்றியை கருத்தில் கொண்டு ராகுல் மிடில் ஆர்டரில் இருக்க விரும்பினால், தவானுடன் கிஷன் கிஷன் அல்லது ருத்ராஜ் கெய்க்வாட் ஜோடி சேர வாய்ப்புள்ளது. டெஸ்ட் அணியின் கேப்டனுக்கான பரிலீசனையில் ராகுல் இருப்பதால் அவரது செயல்பாட்டை தேர்வாளர்கள் உற்று நோக்குவார்கள் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

ஆல்ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர்

கடந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக 198 ரன்கள் எடுத்த வெங்கடேஷ் ஐயர் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். தொடர்ந்து ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய அவர் தொடரில் அந்த அணி உயிர்ப்புடன் இருக்க ஒரு ஆல்ரவுண்டராக உதவியிருந்தார்.

ஒருநாள் போட்டியில் தன்னை ஒரு ஃபினிஷராக நிரூபிக்க, சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே டிராபியில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்திருந்தார். அவரின் அந்த முடிவு அவருக்கு நிச்சயமாக உதவியது என்றே கூறலாம். இந்த தொடரில் ஆறு ஆட்டங்களில் விளையாடிய அவரின் சராசரி 63.16 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 133.92 ஆகவும் உள்ளது. மேலும், இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 379 ரன்கள் குவித்து இருந்தார்.

பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட வெங்கடேஷ் ஐயர் 5.75 எகானமியுடன் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாததால், வெங்கடேஷ் ஆல்ரவுண்டராக களமிறப்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்தியாவின் பந்துவீச்சு காம்பினேஷன் எப்படி இருக்கும்?

இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் அல்லது 2 வேகப்பந்து வீச்சாளர்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கடேஷ் ஐயரை ஆறாவது பந்துவீச்சு விருப்பமாக மட்டுமே கருதுவது ஆடும் முழு லெவனையும் பாதிக்கலாம். அப்படி வெங்கடேஷ் விளையாடும் பட்சத்தில், நான்கு முன்னணி பந்துவீச்சாளர்களைத் தவிர இந்தியா ஷர்துல் தாக்கூரை கைவிட வாய்ப்புள்ளது.

மற்றொரு விருப்பமாக, வெங்கடேஷை முழுவதுமாக விட்டுவிட்டு, ஐந்து பேட்டர்கள், ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் ஐந்து முறையான பந்துவீச்சாளர்களுடன் செல்லவும் வாய்ப்புள்ளது. தீபக் சாஹர் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக 7வது இடத்தில் விளையாடலாம். இருப்பினும், அது கேப்டனின் முடிவை பொறுத்தே அமையும்.

அஸ்வினின் ஒருநாள் அணி கம்பேக்

முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் கடைசியாக ஜூன் 2017ல் ஒருநாள் தொடரில் விளையாடி இருந்தார். கடந்தாண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் அவர் மீண்டும் விளையாடினார். இந்த தொடரில் மூன்று ஆட்டங்களில் களமிறங்கிய அவர் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

டி20-யை விட ஒருநாள் போட்டி சுழற்பந்து வீச்சாளருக்கு அதிக சவாலை தரும். டி20 போட்டிகளில் நான்கு ஓவர்களை ரன் ஏதும் விட்டுக்கொடுக்கமல் வீசினாலே போதுமானது. ஆனால், ஒருநாள் போட்டிகளின் மிடில் ஓவர்களில் திருப்புமுனைகளை ஏற்படுத்த வேண்டும். அதையே எந்தவொரு அணியும் விரும்பும்.

இதனை அஸ்வின் செய்து காட்டுவாரா?. அப்படி அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் யுஸ்வேந்திர சாஹல் அணியில் இடம்பிடிப்பது சற்று கடிமானதாக இருக்கும்.

பும்ராவின் பணிச்சுமை மேலாண்மை

ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடருக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது பணிச்சுமையை அணி நிர்வாகம் கண்காணிக்கும். இந்தத் தொடர் உலகக் கோப்பை சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாக இல்லை என்றாலும், 2023 உலகக் கோப்பைக்கு இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

ஐந்து நாட்களில் மூன்று ஆட்டங்கள் விளையாடப்பட உள்ளதால், பும்ராவுக்கு சிறிது ஓய்வு வழங்க இந்திய நிர்வாகம் முடிவு செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தியா அணி வீரர்கள் விபரம்

கேஎல் ராகுல் (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், ஆர் அஷ்வின் , புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், எம்.டி. சிராஜ், ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Virat Kohli Sports Rohit Sharma Cricket Indian Cricket Team Kl Rahul Jasprit Bumrah India Vs South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment