இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. முதல் போட்டி இன்று (டிச.10) தென் ஆப்பிரிக்காவின் கிங்ஸ்மீட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஏய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும், சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியும் மோத உள்ளன. கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துகிறார். ஆஸ்திரேலியா உடனான தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்திய நிலையில் இந்த தொடரில் வெற்றி களிப்புடன் இந்திய அணி பங்கேற்கிறது.
கிங்ஸ்மீட், டர்பன் பிட்ச் அறிக்கை
டர்பனின் கிங்ஸ்மீட் மைதானம் வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் சமநிலையான மேற்பரப்பை வழங்குகிறது. இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 153 ஆகும். இங்கு நடைபெற்ற 22 முதல் பேட்டிங்
போட்டிகளில் 11 போட்டிகள் முதல் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு நடந்த கடைசி டி20 தொடரில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது, இது ரன்-ஃபெஸ்ட்டாக மாறியது. அதனால் இந்த போட்டி பரபரப்புக்கு குறையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிங்ஸ்மீட், டர்பன் பதிவுகள் மற்றும் புள்ளி விவரங்கள்
மொத்த டி20 போட்டிகள்: 22
முதலில் பேட்டிங் செய்து வென்ற போட்டிகள்: 11
முதலில் பந்துவீச்சு செய்து வென்ற போட்டிகள்: 9
சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 153
சராசரி இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர்: 135
இந்திய டி20 அணி
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கர் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் (விக்கர் கீப்பர்), முகே. குமார், வாஷிங்டன் சுந்தர், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, குல்தீப் யாதவ்
தென் ஆப்பிரிக்கா டி20 அணி
ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கர் கீப்பர்), டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மகராஜ், ஜெரால்ட் கோட்ஸி, நான்ட்ரே பர்கர், மார்ட்டென் பர்கர், மார்ட்டென் பர்கர், டப்ரைஸ் , டோனோவன் ஃபெரீரா, லிசாட் வில்லியம்ஸ்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“