IND vs SA: 6 போட்டிகள் முழு அட்டவணை; இந்தியா பிளேயிங் 11 எப்படி?
South Africa tour of India 2022 Schedule, Squad List and full details in tamil: சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ள இந்தியா, அதே உத்வேகத்தில் தென் ஆப்ரிக்காவுடனும் களமாட தயாராகி வருகிறது.
South Africa tour of India 2022 Schedule, Squad List, T20, Schedule Venue, ODI, Venue, Team List, Tickets, ODI Schedule, Live Score, Live Telecast Channel In India, And Live Streaming Details Tamil News
South Africa tour of India 2022 Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணமாக வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி நாளை புதன்கிழமை இரவு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. தற்போது திருவனந்தபுரத்தை அடைந்துள்ள இரு அணிகளும், அங்குள்ள மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisment
Advertisment
Advertisement
பாண்டியா - புவி இல்லை
முன்னதாக, சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதனால் அதே உத்வேகத்தில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாண்டியாவுக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல், முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் பேட்டிங் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா இந்த தொடரில் பங்கேற்ற மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா vs தென் ஆப்ரிக்கா: போட்டி – முழு அட்டவணை
டி-20 போட்டிகள்:
செப்டம்பர் 28, 1வது டி20 - கிரீன்ஃபீல்ட் சர்வதேச ஸ்டேடியம், திருவனந்தபுரம், இரவு 7.30 மணி IST
அக்டோபர் 2, 2வது டி20 - பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி, இரவு 7.30 மணி IST
அக்டோபர் 4, 3வது T20I - ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம், இந்தூர், இரவு 7.30 IST
ஒருநாள் போட்டி:
அக்டோபர் 6, 1வது ஒருநாள் போட்டி - ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ, பிற்பகல் 1.30 IST
அக்டோபர் 9, 2வது ODI – JSCA சர்வதேச மைதான வளாகம், ராஞ்சி, மதியம் 1.30 IST
அக்டோபர் 11, 3வது ஒருநாள் போட்டி – அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி, மதியம் 1.30 IST
இந்தியா vs தென் ஆப்ரிக்கா: இரு அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு: