/tamil-ie/media/media_files/uploads/2018/01/A55.jpg)
ind vs sa test series india sqaud announced lokesh rahul dropped - லோகேஷ் அவுட்.. ஷுப்மன் கில் இன் - தென்.ஆ.,க்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில், முதல் டி20 போட்டி செப்டம்பர் 15ம் தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி மொஹாலியிலும் (செப் 18) மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் (செப் 22)ம் தேதியும் நடைபெறுகிறது.
அதேபோல், முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 2ம் தேதியும், இரண்டாவது போட்டி அக்.10ம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி அக்.19ம் தேதியும் தொடங்குகிறது.
இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
விராட் கோலி(c), மாயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா, சத்தீஸ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே(vc), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(wk), ரிதிமான் சாஹா(wk), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷுப்மன் கில்
India’s squad for 3 Tests: Virat Kohli (Capt), Mayank Agarwal, Rohit Sharma, Cheteshwar Pujara, Ajinkya Rahane (vc), Hanuma Vihari, Rishabh Pant (wk),Wriddhiman Saha (wk), R Ashwin, Ravindra Jadeja, Kuldeep Yadav, Mohammed Shami, Jasprit Bumrah, Ishant Sharma, Shubman Gill
— BCCI (@BCCI) September 12, 2019
லோகேஷ் ராகுல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம், ஷுப்மன் கில்க்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.