ind vs sa test series india sqaud announced lokesh rahul dropped - லோகேஷ் அவுட்.. ஷுப்மன் கில் இன் - தென்.ஆ.,க்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில், முதல் டி20 போட்டி செப்டம்பர் 15ம் தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி மொஹாலியிலும் (செப் 18) மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் (செப் 22)ம் தேதியும் நடைபெறுகிறது.
Advertisment
Advertisement
அதேபோல், முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 2ம் தேதியும், இரண்டாவது போட்டி அக்.10ம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி அக்.19ம் தேதியும் தொடங்குகிறது.
இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.