/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-22T133555.672.jpg)
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் வருகிற 26-ந்தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
📸 M🙂🙂D in the camp right now
All smiles here at Centurion 😃#TeamIndia | #SAvINDpic.twitter.com/IOaMfH6h7h— BCCI (@BCCI) December 21, 2021
The #Proteas continue to fine-tune their skills as preparation for the #SAvIND#BetwayTestSeries 🏏 #FreedomSeries#BePartOfItpic.twitter.com/afl8J1OiJc
— Cricket South Africa (@OfficialCSA) December 21, 2021
தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி இதுவரை 7 டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. இதில் 6 முறை தென்னாப்பிரிக்க அணியே தொடரை கைப்பற்றியுள்ளது. ஒரு டெஸ்ட் தொடர் இந்திய அணியால் சமன் செய்யப்பட்டது. கடைசியாக 2018ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரை 2- 1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி வசப்படுத்தியது. அப்போது அந்த அணியில் ஏ.பி டிவில்லியர்ஸ், டூபிளெஸ்ஸிஸ், அம்லா, ஸ்டெயின், பிளாண்டர் போன்ற ஜாம்பவான் வீரர்கள் விளையாடினர்.
தற்போது இந்த வீரர்கள் அனைவருமே ஓய்வு பெற்று விட்ட நிலையில், இந்த டெஸ்ட் தொடரை விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-22T135143.685.jpg)
இந்நிலையில், இந்த தொடருக்கு முன்னதாக பேசியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரை புகழந்து தள்ளியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-22T133638.156.jpg)
"இந்திய கிரிக்கெட் அணி திறமையான வேகப்பந்திவீச்சாளர்களை கொண்டுள்ளது. இதில் பும்ரா வேர்ல்டு கிளாஸ் பவுலராக திகழ்கிறார். தென்னாப்பிரிக்க மண்ணில் உள்ள ஆடுகளத்தை இந்திய பவுலர்களில் ஒருவரால் மட்டுமே சாதமாக பயன்படுத்த முடியும். அது நிச்சயம் ஜஸ்பிரித் பும்ராவாகத் தான் இருக்கும். ஏனெனில் அவரது பந்துவீச்சு துல்லியமாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது. எனினும், அவர் ஒருவரை மட்டும் நாங்கள் போகஸ் செய்து விளையாட விரும்பவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-22T133652.702.jpg)
தற்போது உள்ள இந்திய அணி கடைசி இரண்டு மூன்று வருடங்களில் சிறந்த டெஸ்ட் அணியாக உள்ளது. அயல்நாட்டு மண்ணில் அவர்கள் பெற்ற வெற்றியே அதற்குச் சான்றாக உள்ளது. இந்திய அணியின் அனுபவ வீரர் அஷ்வின் தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அவர் உலகின் மிகச்சிறந்த ஸ்பின்னராக உள்ளார்." என்று தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.
📸📸 from our training here today at SuperSport Park 🏟️#TeamIndia | #SAvINDpic.twitter.com/r5a890urkt
— BCCI (@BCCI) December 20, 2021
தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், ஜடேஜா ஆகிய வீரர்கள் காயம் காரணமாக பங்கேறகவில்லை. இதேபோல், இந்த தொடரில் தென்னாப்பிரிக்கா வீரர் ஆன்ரிச் நோர்கியா காயம் காரணமாக விலகியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.