IND vs SA Test Tamil News: தெனாப்பிரிக்க மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வருகிற 26ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக இந்தியா – தெனாப்பிரிக்கா அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
📸📸 from our training here today at SuperSport Park 🏟️#TeamIndia | #SAvIND pic.twitter.com/r5a890urkt
— BCCI (@BCCI) December 20, 2021
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் வீரரான ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தும் வாய்ப்பை பெற்றுள்ளார். அது என்ன சாதனை என்றால், தற்போது பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் பேட்ஸ்மேனை 97 முறை (89 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங்) அவுட் செய்துள்ளார். 24 வயதான அவர் இதனை 25 டெஸ்ட் போட்டிகளில் செய்துள்ளார்.


பண்ட் 100 என்ற இலக்கை அடைய இன்னும் 3 அவுட்கள் மட்டுமே தேவை. அப்படி அவர் இதனை செய்யும் பட்சத்தில் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான எம்.எஸ் தோனியை கடந்து விடுவார். (தோனி 36 போட்டிகளில் இச்சாதனையை படைத்துள்ளார்)

மேலும், டெஸ்டில் இச்சாதனையை படைக்கும் பட்சத்தில் குறைந்த வயதில் இந்த மைல்கல்லை அடைந்த வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“