/indian-express-tamil/media/media_files/BwxUmpOv5REmswWkpenV.jpg)
இந்திய அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
Virat-kohli | ruturaj-gaikwad | india-vs-south-africa: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் இருந்தது. தொடர்ந்து நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றியது.
அடுத்ததாக, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற செவ்வாய்க்கிழமை (டிச. 26) முதல் தொடங்குகிறது. 'பாக்சிங் டே' போட்டியாக செஞ்சுரியன் மைதானத்தில் நடக்கிறது.
நாடு திரும்பிய கோலி
இந்நிலையில், தென் ஆப்ரிக்கா உடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோலி, தற்போது திடீரென நாடு திரும்பியுள்ளார். அவர் குடும்ப காரணங்களுக்காக தென் ஆப்ரிக்காவில் இருந்து நாடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், கோலி செஞ்சுரியனில் டிசம்பர் 26 முதல் தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்திய அணி நிர்வாகத்திடம் இரண்டு நாட்கள் ஓய்வு கேட்ட நிலையில், அவர் நாடு திரும்பியிருக்கிறார். இதனால் கோலி பிரிட்டோரியாவின் டக்ஸ் ஓவலில் தற்போது நடைபெற்று வரும் மூன்று நாள் அணிக்கு உள்பட்ட பயிற்சி ஆட்டத்தை தவறவிட்டுள்ளார்.
கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 24 இன்னிங்ஸ்களில் 56.18 சராசரியுடன் 1236 ரன்கள் எடுத்துள்ளார். அந்த அணிக்கு எதிராக மூன்று சதங்கள் மற்றும் 4 அரை சதங்களை விளாசியுள்ளார். புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்டில் அவர் ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்தது, 2019 இல் இந்தியாவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அவரது மறக்கமுடியாத டெஸ்ட் நாக்களில் இதுவும் ஒன்றாகும்.
ருதுராஜ் விலகல்
இதற்கிடையில், இந்திய அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் குணமடைய ஐந்து வாரங்கள் ஆகும் என்பதால், அவருக்கு மாற்று வீரரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று அறிவிக்க வாய்ப்புள்ளது.
26 வயதான அவருக்கு, டிசம்பர் 19 அன்று போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது விரலில் காயம் ஏற்பட்டது.
வரலாறு படைக்குமா இந்தியா?
இந்தியா இதுவரை தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை. தென் ஆப்பிரிக்காவில் மற்ற வகை வீரர்களுக்கு ஓய்வு அளித்து டெஸ்ட் தொடருக்கு இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தொடரில் வென்றால் நிச்சயம் வரலாற்றுச் சாதனை படைக்கும்
இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடவில்லை. அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரே ஒரு நாள் சர்வதேச போட்டியில் இடம்பெற்றார்.
வியாழக்கிழமையுடன் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகிய ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. எனவே, அவர்களும் இந்த தொடரில் முழு உத்வேகத்துடன் திரும்புவார்கள்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.