IND vs SCO Match Highlights in tamil: 7வது டி20 உலக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான சூப்பர்-12 லீக் ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில் நேற்றிரவு 7:30 மணிக்கு (வெள்ளிக்கிழமை) தொடங்கிய லீக் ஆட்டத்தில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் மோதுதின.
India have won the toss and elected to field in Dubai 🏏#T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/xjuQBeL4Pr
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். எனவே ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க நினைத்த தொடக்க வீரரும் அந்த அணியின் கேப்டனுமான கைல் கோட்ஸர் (1 ரன்) பும்ராவின் வேகத்தில் சிக்கி போல்ட் அவுட் ஆனார்.
Bowled 💥
Bumrah with an absolute ripper to dismiss Coetzer! #T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/WuAqnw1xvn— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
அவருடன் மறுமுனையில் இருந்து அதிரடி காட்டிய ஜார்ஜ் முன்சி 1 சிக்ஸர் 4 பவுண்டரிகளை துரத்தி 24 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதனால் அந்த அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் சேர்த்தது.
Munsey departs!
Shami strikes in his first over as the opener attempts a big one. #T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/jQ1ta8cQNI— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
தொடர்ந்து வந்த வீரர்கள் அணிக்கு வலுவான ரன்களை சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கையில் அடுத்தடுத்த ஓவரில் தங்களின் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார்கள். இதனால் 17.4 வது ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த ஸ்காட்லாந்து அணி 85 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
Scotland are all out for 85 ☝️
An excellent performance from the Indian bowlers 👏#T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/A7ACgN0UCi— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
மிகத்துல்லியமாக பந்துகளை வீசிய ஸ்காட்லாந்துக்கு நெருக்கடி கொடுத்த இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி தலா 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Another one for Jadeja ☝️
He traps Matthew Cross as Scotland lose their fourth. #T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 https://t.co/ifWT1oAD9S— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
தொடர்ந்து 86 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் - ரோஹித் சர்மா ஜோடி ரன் மழை பொழிந்தனர். இதில் 16 பந்துகளில் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விரட்டிய ரோஹித் சர்மா 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிவேக அரைசதம் கடந்த கேஎல் ராகுல் 18 பந்துகளில் 3 சிக்ஸர் 6 பவுண்டரிகளை சிதறவிட்டு 50 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.
Pure entertainment 🔥#T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/3REx1mLFm6
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
பின்னர் களத்தில் இருந்த கேப்டன் கோலி - சூர்யகுமார் யாதவ் ஜோடி 6.3வது ஓவரிலேயே நிர்ணயிக்கப்பட்ட 86 ரன்கள் கொண்ட இலக்கை எட்ட உதவியது. இதனால் 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
India unleash the 🎆#T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/3XRPyr4n3P
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை விட நெட் ரன்ரேட்டில் இந்திய அணி முன்னேற ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 85 ரன்கள் கொண்ட இலக்கை 43 பந்துகளில் எட்டிப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இலக்கை 39 பந்துகளிலே இந்திய அணி எட்டிப்பிடித்து அசத்தியது.
The final stretch in Group 2 🏃
Which team will join Pakistan in the semis? 🤔#T20WorldCup pic.twitter.com/QOPXMnfSBP— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
.@imjadeja starred with the ball to set up #TeamIndia's superb 8⃣-wicket win over Scotland & bagged the Man of the Match award. 👏 👏 #T20WorldCup #INDvSCO
Scorecard ▶️ https://t.co/cAzmUe5OJM pic.twitter.com/Pvl6PTK4Ut— BCCI (@BCCI) November 5, 2021
எனவே இந்திய அணியின் நெட் ரன்ரேட் +1.619 ஆகவும், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளின் நெட் ரன்ரேட் +1.481 மற்றும் +1.277 ஆகவும் உள்ளன. வரும் ஞாயிற்று கிழமை (நவம்பர் 7) அன்று நடக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
India's fate in T20 World Cup 2021 depends on Afghanistan and it will be decided on November 7th, Sunday.
— Johns. (@CricCrazyJohns) November 5, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 21:56 (IST) 05 Nov 2021ஸ்காட்லாந்தை வெளுத்து வாங்கிய இந்தியாவுக்கு அபார வெற்றி!
ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் இந்திய அணி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. இதனால் அந்த அணி 6.3வது ஓவரிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து எட்டியது. இதனால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- 21:46 (IST) 05 Nov 2021அதிவேக அரைசதம் கடந்த கேஎல் ராகுல் அவுட்!
86 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் இந்திய அணியில் அதிவேக அரைசதம் கடந்த கேஎல் ராகுல் 18 பந்துகளில் 3 சிக்ஸர் 6 பவுண்டரிகளை சிதறவிட்டு 50 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.
- 21:43 (IST) 05 Nov 2021ரோஹித் சர்மா அவுட்!
ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் இந்திய அணியில் 16 பந்துகளில் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விரட்டிய ரோஹித் சர்மா 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
- 21:37 (IST) 05 Nov 2021களத்தில் இந்திய அணி!
86 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்துள்ளது. தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் - ரோஹித் சர்மா ஜோடி ரன் மழை பொழிந்து வருகிறது.
- 21:11 (IST) 05 Nov 2021இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு!
ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை விட நெட் ரன்ரேட்டில் இந்திய அணி முன்னேற ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 85 ரன்கள் கொண்ட இலக்கை 43 பந்துகளில் எட்டிப்பிடிக்க வேண்டும்.
- 21:00 (IST) 05 Nov 202185 ரன்னில் சுருண்ட ஸ்காட்லாந்து; இந்தியாவுக்கு 86 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலி பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி தொடர் விக்கெட் இழப்பை சந்தித்த நிலையில் 85 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணிக்கு 86 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Scotland are all out for 85 ☝️
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
An excellent performance from the Indian bowlers 👏t20worldcup | indvsco | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/A7ACgN0UCi - 20:53 (IST) 05 Nov 2021தொடர் விக்கெட் சரிவு; ரன் சேர்க்க தடுமாறும் ஸ்காட்லாந்து!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலி பேட்டிங் செய்து வரும் ஸ்காட்லாந்து அணி தொடர் விக்கெட் இழப்பை சந்தித்து வரும் நிலையில் 17 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களை சேர்த்துள்ளது.
- 20:12 (IST) 05 Nov 2021அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; ஸ்காட்லாந்து ரன் சேர்ப்பதில் சுணக்கம்!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலி பேட்டிங் செய்து வரும் ஸ்காட்லாந்து அணியில் 2வது விக்கெட்டுக்கு பின்னர் வந்த மேத்யூ கிராஸ்(2), ரிச்சி பெரிங்டன் (0) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ள நிலையில் அந்த அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் சேர்த்துள்ளது.
- 20:00 (IST) 05 Nov 2021பவர் பிளே முடிவில் ஸ்காட்லாந்து!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலி பேட்டிங் செய்து வரும் ஸ்காட்லாந்து அணி பவர் பிளே 2 விக்கெட்டை இழந்து 27 ரன்களை சேர்த்துள்ளது.
- 19:47 (IST) 05 Nov 2021கேப்டன் கைல் கோட்ஸர் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலி பேட்டிங் செய்து வரும் ஸ்காட்லாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கைல் கோட்ஸர் (1 ரன்) பும்ராவின் வேகத்தில் சிக்கி போல்ட் அவுட் ஆனார்.
Bowled 💥
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
Bumrah with an absolute ripper to dismiss Coetzer! t20worldcup | indvsco | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/WuAqnw1xvn - 19:36 (IST) 05 Nov 2021ஆட்டம் இனிதே ஆரம்பம்!
இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். எனவே ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
ஸ்காட்லாந்து அணியின் ஜார்ஜ் முன்சி - கைல் கோட்ஸர் ஜோடி அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
- 19:19 (IST) 05 Nov 2021இரு அணி சார்ப்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர்(கேப்டன் ), மேத்யூ கிராஸ்(விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீஃப், அலாஸ்டெய்ர் எவன்ஸ், பிராட்லி வீல்
இந்தியா (பிளேயிங் லெவன்): கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி(கேப்டன் ), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா
- 19:12 (IST) 05 Nov 2021ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டம்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு!
டி20 உலக்கோப்பை தொடரில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். எனவே ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
- 18:54 (IST) 05 Nov 2021இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு?
இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் (ஸ்காட்லாந்து, நமீபியா) இமாலய வெற்றி பெற வேண்டும். மற்றொரு போட்டியில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைய வேண்டும். இவ்வாறு நடந்தால் இந்தியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தலா 6 புள்ளிகள் பெறும். 'ரன் ரேட்' அடிப்படையில் இந்திய அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்கலாம்.
- 18:33 (IST) 05 Nov 2021ஃபார்முக்கு திரும்பியுள்ள அஸ்வினுக்கு இன்றைய ஆட்டத்தில் இடம் கிடைக்குமா?
ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப்பின் மீ்ண்டும் வெள்ளை பந்து ஃபார்மெட்டுக்கு திரும்பிய அஸ்வின், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தன்னுடைய ஃபார்மை நிரூபித்தார். 4 ஓவர்கள் வீசிய அவர் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே இன்றைய ஆட்டத்திலும் அவர் 'சுழலில்'மிரட்டலாம். மேலும் அவர் இன்றைய ஆட்டத்திலும் களமிறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 18:24 (IST) 05 Nov 2021'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' கணித்துள்ள இரு அணி விபரம் பின்வருமாறு:-
இந்தியா:
ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர் அல்லது புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா
ஸ்காட்லாந்து:
ஜார்ஜ் முன்சி, கைல் கோட்சர், கலம் மேக்லியோட், ரிச்சி பெரிங்டன், மைக்கேல் லீஸ்க், மேத்யூ கிராஸ், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீப், அலஸ்டெய்ர் எவன்ஸ், பிராட் வீல்
- 18:24 (IST) 05 Nov 2021இரவு 7:30 தொடங்கும் ஆட்டம்!
அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் டி20 உலக்கோப்பை தொடரில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
“India, If you want this trophy, you’re going to have to go through us” pic.twitter.com/1gqUTaLypC
— Cricket Scotland (@CricketScotland) November 5, 2021 - 18:18 (IST) 05 Nov 2021'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' கணித்துள்ள இரு அணி விபரம் பின்வருமாறு:-
இந்தியா:
ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர் அல்லது புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா
ஸ்காட்லாந்து:
ஜார்ஜ் முன்சி, கைல் கோட்சர், கலம் மேக்லியோட், ரிச்சி பெரிங்டன், மைக்கேல் லீஸ்க், மேத்யூ கிராஸ், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீப், அலஸ்டெய்ர் எவன்ஸ், பிராட் வீல்
- 18:11 (IST) 05 Nov 2021‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
7வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது 'சூப்பர் 12' லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.