IND vs SL 1st T20 Match 2023 Highlits in tamil: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி இன்று செவ்வாய்கிழமை (ஜனவரி 3 ஆம் தேதி) இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மான் கில் 7 ரன்னிலும், பின்னர் வந்த சூரியகுமார் யாதவ் 7 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 47 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாண்டியா தொடக்க வீரர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் 29 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸர்களை அடித்த இஷான் கிஷன் 37 ரன்னில் அவுட் ஆனார். அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி நிதானம் காட்டிய கேப்டன் பாண்டியா 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதிக் கட்டத்தில் சிறப்பான ஜோடியை அமைத்த தீபக் ஹூடா – அக்சர் பட்டேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியில் ஹூடா 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார். அக்சர் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரிகளை தெறிக்கவிட்டார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷன் கிஷன் 37 ரன்னும், தீபக் ஹூடா 41 ரன்னும், அக்சர் பட்டேல் 31 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணியில் ஹசரங்கா, தீக்சனா, டி சில்வா, கருணாரத்னே, மதுஷான்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
#TeamIndia post 162/5 on the board!
— BCCI (@BCCI) January 3, 2023
4⃣1⃣* for Deepak Hooda
3⃣7⃣ for Ishan Kishan
3⃣1⃣* for Akshar Patel
Over to our bowlers now 👍 👍
Sri Lanka innings underway.
Scorecard ▶️ https://t.co/uth38CaxaP #INDvSL pic.twitter.com/9yrF802Khi
தொடர்ந்து 163 ரன்கள் கொண்ட வெற்றி துரத்திய இலங்கை அணிக்கு நல்ல தொடக்க கிடைக்கவில்லை. தொடக்க வீரர் பதும் நிஸ்ஸங்க ஷிவம் மாவி வீசிய 1.2 வது பந்தில் போல்ட்-அவுட் ஆகி ஒரு ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களில் தனஞ்சய டி சில்வா (8), சரித் அசலங்கா (12), பானுக ராஜபக்ச (10) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனிடையே நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் 28 ரன்னில் அவுட் ஆனார்.
இதன்பிறகு களத்தில் இருந்த கேப்டன் தசுன் ஷனக 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு இந்திய ரசிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார். ஆனால், அவரின் விக்கெட்டை வீழ்த்தினார் இந்தியாவின் வேகப் புயல் உம்ரான் மாலிக். இந்த தருணத்தில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கையின் வெற்றிக்கு 12 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது.
இந்தியாவின் ஹர்ஷல் படேல் வீசிய 18.4 வது பந்தில் கருணாரத்னே ஒரு சிக்ஸரை பறக்க விட, ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இப்போது இலங்கையின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்றானது. கடைசி ஓவரை அக்சர் படேல்
அக்சர் படேல் அதிர்ந்தாரோ இல்லையோ, ஆட்டத்தை பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. அதனால் எப்போது தான் அந்த சாமிக்க கருணாரத்னே அவுட் ஆகுவார் என்று ரசிகர்கள் பிராத்திக்க தொடங்கினர். இலங்கையின் வெற்றிக்கு 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4வது பந்தில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. 5வது பந்தில் கருணாரத்னேவுடன் மறுமுனையில் இருந்த கசுன் ராஜித ரன்-அவுட் ஆனார். எனினும், கடைசி பந்தை எதிர்கொள்ள ஸ்ட்ரைக் என்டில் கருணாரத்னே இருந்தார். ஏற்கனவே 2 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்ட நிலையில், இப்போது மீண்டும் அடிப்பாரா? அல்லது பவுண்டரி அடிப்பாரா? அல்லது 2 ரன்கள் ஓடுவாரா? என பல கேள்விகள் எழுந்தன.
இந்த அழுத்தம் நிறைந்த நேரத்தில் பந்தை விரட்டிய கருணாரத்னே 2 ரன்கள் ஓட முயன்றார். அப்போது அவருடன் ஜோடியில் இருந்த டில்ஷான் மதுஷங்க ரன்-அவுட் செய்யப்பட்டார். இதனால், வெற்றி முகம் இந்தியா பக்கம் திரும்பியது. இலங்கை அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியாவுக்கு திரில் வெற்றி கிடைத்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
That's that from the 1st T20I.#TeamIndia win by 2 runs and take a 1-0 lead in the series.
— BCCI (@BCCI) January 3, 2023
Scorecard – https://t.co/uth38CaxaP #INDvSL @mastercardindia pic.twitter.com/BEU4ICTc3Y
இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு பேட்டிங்கை விட பந்துவீச்சு தான் அதிகம் கை கொடுத்தது எனலாம். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் சிவம் மாவி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதேபோல், ஹர்ஷல் படேல் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பேட்டிங்கில் அதிரடி காட்டிய தீபக் ஹூடா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Deepak Hooda is adjudged Player of the Match for his fine innings of 41* off 23 deliveries as #TeamIndia win by 2 runs.
— BCCI (@BCCI) January 3, 2023
Scorecard – https://t.co/uth38CaxaP #INDvSL @mastercardindia pic.twitter.com/0LYRcUFtnC
Sri Lanka in India, 3 T20I Series, 2023Wankhede Stadium, Mumbai 07 June 2023
India 162/5 (20.0)
Sri Lanka 160 (20.0)
Match Ended ( Day – 1st T20I ) India beat Sri Lanka by 2 runs
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இலங்கை அணி 18 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 28 ரன்கள் தேவை.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இலங்கை அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 32 ரன்கள் தேவை.
பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி பதவியிலிருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைய உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘மன்கட்’ ரன் அவுட் செய்த ஜாம்பா… மீண்டும் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா… டாப் 5 கிரிக்கெட் செய்திகள்
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இலங்கை அணி 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 42 பந்துகளில் 72 ரன்கள் தேவை.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இலங்கை அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 72 பந்துகளில் 116 ரன்கள் தேவை.
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த இந்திய அணியின் அக்சர் – ஹூடா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு இந்திய அணி 162 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் 23 பந்துகளில் 1பவுண்டரி 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹூடா 41 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் இஷான் கிஷான் 37 ரன்களும், ஹூடா ஜோடியில் இருந்த அக்சர் 31 ரன்களும் எடுத்தார்.
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி ஏற்கனவே 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தற்போது சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அவுட் ஆகி வெளியேறியுள்ளார். 4 பவுண்டரிகளை விரட்டிய அவர் 29 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 11 ஓவர்கள் முடிவில் 78 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மான் கில் 7 ரன்னிலும், பின்னர் வந்த சூரியகுமார் யாதவ் 7 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா
மீண்டும் இந்திய அணியில் பும் பும் பும்ரா… அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ!
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – சுப்மான் கில் ஜோடி களமாடிய நிலையில், சுப்மான் கில் 7 ரன்னில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – சுப்மான் கில் ஜோடி களமாடியுள்ளனர்.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 ஆட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் விளையாடவில்லை!
பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஹர்ஷல் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
“வரலாற்று ரீதியாக இது பேட்டர்களுக்கு ஒரு முக்கிய மைதானமாக இருந்து வருகிறது. சிறிய பவுண்டரிகள் ஒரு காரணியாகும்,” என்கிறார் தீப் தாஸ்குப்தா.
“டி20யில் ஆண்டைத் தொடங்க இதைவிட சிறந்த இடம் கிடைக்காது. இந்த களத்தில் பவுன்ஸ் மற்றும் வேகம் கூட இருக்கும். பந்துவீச்சாளர்களுக்கு கடினமான இரவாக இருக்கும். பனியின் அச்சுறுத்தல் பாதுகாப்பை கடினமாக்கும்,” என்கிறார் அஜித்
ஷிவம் மாவி மற்றும் சுப்மான் கில் இந்திய டி20 அணியில் தங்களது முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமாகிறார்கள். அவர்களுக்கு அறிமுக தொப்பி வழங்கப்பட்டது.
Congratulations to @ShubmanGill & @ShivamMavi23 who are all set to make their T20I debut for #teamindia 🇮🇳👌
— BCCI (@BCCI) January 3, 2023
Live – https://t.co/uth38CaxaP #indvsl @mastercardindia pic.twitter.com/gl57DXG3x6
இந்தியா – இலங்கை அணிகள் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 8-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
இந்தியா: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, தில்ஷன் மதுஷன்கா, லாஹிரு குமாரா.
இன்றைய ஆட்டத்திற்கு முன்னதாக பேசிய தசுன் ஷனக, “சமீபத்திய டி20 உலகக் கோப்பை தொடர் எங்களுக்கு சிறப்பானதாக இல்லை. எனவே இந்த தொடரில் நாங்கள் முன்னேறி சிறப்பாக செயல்படுவோம். முதல் ஆட்டம் மிகவும் முக்கியமானது. இந்தியா தனது வரிசையை முற்றிலும் மாற்றிவிட்டது. எங்கள் அணியில் சில அனுபவ வீரர்களை கொண்டுள்ளோம். முதல் ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம், மற்ற ஆட்டங்களுக்கான தொனியை அமைக்கும் முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.” என்று கூறியுள்ளார்.
ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சவுராஷ்டிரா கேப்டன் ஜெய்தேவ் உனத்கட்.
இலங்கை:
தசுன் ஷனக (கேப்டன்), பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, சமிக கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ச, அஷேன் பண்டார, மஹீஷ் தீக்ஷான, மஹீஷ் தீக்ஷான, மஹீஷ் தீக்ஷான துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷன், லஹிரு குமார, நுவன் துஷார
இந்தியா:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷிவம் மாவி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகேஷ் குமார்
ஆசிய சாம்பியனான இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையில் களமாடுகிறது. அந்த அணியில் பதும் நிசாங்கா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, குசல் மென்டிஸ், சுழற்பந்து வீச்சாளர் வானிந்து ஹசரங்கா என்று அந்த அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மும்பை மைதானம் குறைவான பவுண்டரி தூரம் கொண்டதால் அது எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். அதனால் ரசிகர்கள் ரன் மழையை எதிர்பார்க்கலாம். 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.
இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க வீரராக அதிரடி வீரர் இஷான் கிஷனுடன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில் இறங்குவார்கள். மிடில்-ஆடரில் துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் பலம் சேர்க்கிறார்கள்.
சுழலில் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக் நம்பிக்கை அளிக்கிறார்கள். கடந்த ஆண்டில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் இலங்கையிடம் தோல்வி அடைந்த இந்திய அணி அதற்கு பழிதீர்க்க தீவிரம் காட்டும்.
இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய அணியை ஆல்-ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டயா வழிநடத்துகிறார். சூரியகுமார் யாதவ் துணைகேப்டனாக செயல்படுகிறார்.
2024-ம் ஆண்டு டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கான தொடக்கமாக இந்த தொடர் அமையும். இதேபோல், ஹர்திக் பாண்ட்யாவை டி-20 அணிக்கான நிரந்தர கேப்டனாக நியமிப்பதற்கான அடித்தளமாகவும் இந்த தொடர் இருக்கும். மூத்த வீரர்களை பொறுத்தவரை அடுத்த டி-20 உலக கோப்பையில் இடம் பிடிப்பது கடினம் தான். அதனால் இனி அவர்கள் ஒதுங்கி விடுவதற்கு வாய்ப்புள்ளது.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதலாவது டி-20 போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. டிஸ்னி + ஹாட்ஸ்டார் லைவ் ஸ்ட்ரீமிங் செய்கிறது.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதலாவது டி-20 போட்டி குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.