scorecardresearch

கிரிக்கெட் வீரர்களிடம் பீஸ்ட் அப்டேட்… அஜித் ஃபேன்ஸ் ரூட்டில் விஜய் ரசிகர்கள் !

Actor vijay fans aks indian cricketer for ‘Beast’ update during pin-ball test happening at banglore Tamil News: இந்தியா – இலங்கை அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ஒருவரிடம் நடிகர் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் பட அப்டேட் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

IND vs SL 2nd test Tamil News: Vijay fans ask for ‘Beast' update video goes viral

IND vs SL 2nd test Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகல்-இரவு போட்டியாக (பிங்க்-பால் டெஸ்ட்) நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 252 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 109 ரன்னில் சுருண்டது.

இதன்பிறகு நடந்த இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. இந்திய அணியில் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் அரைசதம் கடந்து அசத்தினர். தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இலங்கை அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 109 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியை விட இந்தியா 338 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

பீஸ்ட் அப்டேட் கேட்ட தளபதி விஜய் ரசிகர்கள்; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ:

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியின் நேற்றை 2ம் நாள் ஆட்டநேரத்தில், பவுண்டரியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியிடம் நடிகர் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் பட அப்டேட் கேட்டுள்ளனர். தற்போது அவரது ரசிகளிடையே அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் நடிகர் விஜயின் ரசிகர்கள், “ஷமி பாய், பீஸ்ட் அப்டேட்?” என்று கேட்கின்றனர். அதற்கு அவர் பதிலேதும் கூறாமல் அங்கு நிற்கிறார்.

முன்னதாக, சென்னையில் நடந்த இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியின் போது நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியிடம் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டனர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது நடிகர் விஜயின் ரசிகர்கள் பீஸ்ட் பட அப்டேட் கேட்டுள்ளனர். எனினும், பீஸ்ட் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து படம் குறித்த அப்டேட்களை ரசிகர்களுக்கு வழங்கி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வருகிற ஏப்ரல் 14ம் தேதி உலக முழுதும் வெளியாக இருக்கும் நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs sl 2nd test tamil news vijay fans ask for beast update video goes viral