IND vs SL 3rd T20 Score 2020: ‘ஒரு காலத்துல எப்படி இருந்த மனுசன் தெரியுமா?’ என்று பேஸ்புக், ட்விட்டர் திண்ணையில் உட்கார்ந்து விட்டத்தை பார்த்து பெருமூச்சு விட வைத்துக் கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, இன்று மூன்றாவது டி20 போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது.
முதல் டி20 போட்டி மழையில் ரத்தான பிறகு, (இல்லன்னா மட்டும் அப்படியே கிளு கிளு-ன்னு இருந்திருக்கும்!) இரண்டாவது போட்டியில்,. இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது.
இந்தியாவின் 140 கி.மீ. வேக பந்துவீச்சையே இந்த இலங்கை அணியால் சமாளிக்க முடியவில்லை.
’ஒருநாள் தொடரில் இருந்து தோனி விரைவில் விலகுவார்’: ரவி சாஸ்திரி
இந்தூரின் பேட்டிங் டிராக்கிலேயே அவர்களால் 142 ரன்களே அடிக்க முடிந்தது.
‘என்ன பண்ணுவேன்’ என்று கலங்கும் கேப்டன் மலிங்காவின் கண்ணீரால் நம் கண்கள் கலங்குகின்றன.
இந்திய அணியைப் பொறுத்தவரை, ஷிகர் தவான் தலைக்கு மேல் கத்தி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவரது பேட்டிங் ஈடுபட்டே ஆக வேண்டும். இல்லையெனில், ராகுல் அந்த இடத்தை தட்டிப் பறித்துவிடுவார்.
மற்றபடி, பேட்டிங், பவுலிங்கில் இந்தியாவின் ரேஷியோ கவலைப்படும் அளவுக்கு இல்லை. எனினும், உள்நாட்டில் நடந்த கடைசி மூன்று டி20 தொடர்களில் தலா ஒரு போட்டியில் இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது. இந்த ஒரு பாயிண்ட் மட்டும் இலங்கைக்கு சாதகமாக உள்ளது.
புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கியது.
இலங்கை அணி 15.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. இதனால், 2-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி வென்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.
லோகேஷ் ராகுல் 54 ரன்களும், ரிஷப் பண்ட் 52 ரன்களும் எடுத்தனர். கேப்டன் கோலி 26 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
இந்திய அணி 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருக்கிறது. லோகேஷ் ராகுல், 54 ரன்களில் அவுட்டாக சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்னிலும் வெளியேறினார்கள்.
இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது.
தவான் ஜி…. நீங்க தொடர்ந்து டீமுல இருக்கணும்-னா இன்னைக்கு ஏதாச்சு பம்மாத்து போட்டே ஆகணும்!!!
டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குல்தீப் யாதவுக்கு பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார். ஷிவம் துபேவுக்கு பதிலாக மனீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.